திருப்பூர் மாவட்டத்தில் நடக்கவிருக்கும் திமுகவின் பூத் முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
திமுகவின் கோவை மண்டல அளவிலான பூத்முகவர்கள் கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் படியூரில் இன்று மாலை நடைபெறுகிறது.இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
தமிழக ஏடிஜிபி அருண், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி,உளவுத்துறை ஐஜி செந்தில் வேலவன், மேற்கு மண்டல ஐஜி பவானிஸ்வரி, மாநகராட்சி ஆணையர் பிரதாப்,மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்,மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் விமான நிலையத்தில் முதலமைச்சரை வரவேற்றனர்.தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து கார் மூலம் கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலுக்கு செல்கிறார்.அங்கு சிறிது ஓய்விற்கு பின்பு திருப்பூர் மாவட்டத்திற்கு செல்கிறார்.
கட்சி நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு மீண்டும் கார் மூலம் கோவை விமான நிலையம் வரும் முதல்வர் இரவு 8-50 விமானத்தில் சென்னை திரும்புகிறார்.
முதலமைச்சர் வருகையொட்டி கோவை திருப்பூர் மாவட்டங்களில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதி படியூரில் நடைபெறும் திமுக மண்டல அளவிலான வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.
அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு பின்னர் சாலை மார்க்கமாக காங்கேயம் புறப்படுகிறார்.
இதனிடையே விமான நிலையத்திலிருந்து கார் மூலம் சென்ற முதலமைச்சர் விளாங்குறிச்சி பகுதியில் திடீரென சாலை பணிகளை ஆய்வு செய்தார். அப்பகுதியில் சாலை புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“