Arun Janardhanan
MK Stalin completes one year as DMK chief : கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி திமுகவின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் முக ஸ்டாலின். அதன் பின்பு தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத மாபெரும் வெற்றியை குவித்தது திமுக. 2014ம் ஆண்டு பாராளுமன்றத்தை ஆக்கிரமித்த மிகப் பெரிய மூன்றாவது கட்சியான அதிமுகவினை எதிர்த்து இம்முறை களம் இறங்கியது திமுக. தற்போது அதிமுகவின் இடத்தை தக்க வைத்தது திமுக. ஒரு வருடம் திமுகவின் மிகச்சிறந்த தலைவராக செயல்பட்ட ஸ்டாலின் தென்னிந்தியாவின் மிக முக்கியமான எதிர்கட்சித் தலைவர்களில் ஒருவராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.
மேலும் படிக்க : திமுக தலைவராக ஓராண்டு பயணம் நிறைவு.. ஸ்பெஷல் தேங்ஸ் சொன்ன மு.க ஸ்டாலின்!
கலைஞர் இறந்த போது கனிமொழியின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியானது. ஆனால் எவ்வித எதிர்பார்ப்பும் இன்று கனிமொழி தன்னுடைய அண்ணன் ஸ்டாலினுக்கு ஆதரவாக இருந்தார். கனிமொழியின் அரசியல் எதிர்காலம் குறித்து நன்றாக யோசித்த ஸ்டாலின் அவருக்கு ராஜ்யசபா பொறுப்பிற்கு பதிலாக மக்களவையில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கினார். தூத்துக்குடி தொகுதியில் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை எதிர்த்து களமாடி வெற்றியும் பெற்றார் கனிமொழி.
நாடாளுமன்ற திமுக தலைவராக கனிமொழி டதேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சியில் இருக்கும் இதர எம்.பிக்களுக்கு தனித்தனி பொறுப்புகள் வழங்கி உத்தரவிட்டார் ஸ்டாலின். மிக முக்கியமான பொறுப்புகளை திருச்சி சிவா, டி.ஆர். பாலு போன்றோர்களுக்கு ஒதுக்கினார். அனைத்து முடிவுகளையும் நகைச்சுவையுடனும், தெளிவான புரிதலுடனும் எடுப்பதால், திமுக கூட்டணிக்குள்ளோ, கட்சிக்குள்ளோ பூசல்களும் இல்லை. புகார்களும் இல்லை என்று கூறுகிறார் திமுக எம்.பி. ஒருவர்.
மேலும் படிக்க : இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
சென்னை முன்னாள் மேயர் எம். சுப்ரமணியம் கருத்து
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் M.சுப்ரமணியம், இது குறித்து குறிப்பிடுகையில், ஸ்டாலின் முதல் வருடம் வெற்றிகரமாகவே அமைந்திருந்தது. தேர்தல் முடிவுகளே அதற்கு உதாரணம். நிறைய திமுக வேட்பாளர்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.பி.களாக தேர்வு செய்யப்பட்டுள்ள்ளனர். கூட்டணி அமைப்பதிலும் மற்ற்க கட்சிகளுக்கு முன்னுதாரணமாக திமுக தலைவர் செயல்பட்டுள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.
சர்ச்சையில் இருந்தும் தப்பிக்கவில்லை
ஆனாலும், சர்ச்சையில் இருந்து அவரால் தப்பிக்க இயலவில்லை. தன்னுடைய மகனான, தயாரிப்பாளர் - நடிகர் உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி தலைவராக தேர்வு செய்து அறிவித்தார். இது குறித்து Centre for Study of Social Exclusion and Inclusive Policy - அமைப்பைச் சேர்ந்த பி. ராமஜெயம் இது குறித்து குறிப்பிடுகையில், அரசியல் தலைவர்கள் அடுத்த தலைவரை உருவாக்குவதற்காக அரசியல் சூழலில் வளராத அவர்களின் குழந்தைகளை அரசியலுக்குள் இழுத்துவிடுவது வழக்கம். ஸ்டாலினும் அவ்வாறே செய்துள்ளார். ஆனாலும் இளைஞரணி தலைவராக அறிவித்துள்ளார். உதயநிதி இனி நிறைய பயணிக்க வேண்டும். மக்களை சந்திக்க வேண்டும். ஸ்டாலினும் தன்னுடைய அரசியல் வாழ்வை இவ்வாறே துவங்கினார்.
நிதானமாக களமாடும் முக ஸ்டாலின்
தற்போது மத்தியில் முன்வைக்கப்படும் முக்கியமான பல்வேறு பிரச்சனைகளுக்கு சரியான நேரத்தில் நிதானமாக தன்னுடைய எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார். அவர் தேர்ந்தெடுத்து களமாடும் இடங்களையும் நிதானமாக தேர்வு செய்கிறார். இந்தி எதிர்ப்பு, மத்திய அரசுக்கு எதிரான குரலையும் உயர்த்தி சற்று தெளிவாக பதிவு செய்கிறார்.
காங்கிரஸ் கூட்டணியில் யார் பிரதம வேட்பாளர் என்று யாரும் ஒரு முடிவுக்கு வராத சூழலில், காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை முன் மொழிந்தார். அதே போன்று காஷ்மீர் விவகாரத்திலும் தெளிவாக தன்னுடைய எதிர்ப்புக் குரலை பதிவு செய்தார். 10% இடஒதுக்கீட்டிற்கு எதிராக முதன் முதலாக தன்னுடைய குரலை பதிவு செய்த கட்சியும் திமுக தான்.
குடும்ப அரசியல்
கட்சியின் பல்வேறு முக்கிய முடிவுகளுக்கும் ஸ்டாலினுக்கு பின்னால் மிகவும் வலிமையான ஊன்று கோலாக இருப்பது ஸ்டாலினின் மருமகன் சபரீசன் என்று ஒரு கருத்து நிலவி வருகிறது. ஜெயலலிதா போன்று செல்ஃப் செண்ட்ரிக்காக தன்னுடைய கட்சியை வடிவமைப்பதாகவும் முக ஸ்டாலின் மீது பல்வேறு அதிருப்திகளும் நிலவி வருகின்றன. இதனால் அக்கட்சியில் வெகுநாட்களாக இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு இது ஒரு இக்கட்டான சூழலை உருவாக்கியுள்ளது.
அதிமுகவின் கழக அமைப்புச் செயலாளரான சி. பொன்னையன் இது குறித்து கூறுகையில், ஸ்டாலின் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு முக்கிய கட்சிப் பொறுப்புகளை பகிர்ந்தளிப்பது திமுகவிற்கு பலவீனத்தை தான் அளிக்கும். திமுகவின் இந்த சில முடிவுகள் அக்கட்சியின் முக்கிய தலைவர்களின் எதிர்ப்பினை சம்பாதித்துள்ளது. முக ஸ்டாலின் அவருடைய தந்தையைப் போன்ற சிறந்த பேச்சாற்றல் கொண்டவரோ அல்லது அனுபவம் மிக்க மனிதரோ இல்லை. 2ஜி ஊழலில் பெற்ற பெரும் பணமே அவரை அக்கட்சியின் தலைவராக நீட்டிக்க வைத்திருக்கிறது என்றும் பொன்னையன் அறிவித்துள்ளார்.