scorecardresearch

கல்லூரி நண்பரை காப்பாற்ற இறுதிவரை போராடிய முதல்வர் ஸ்டாலின் 

”எனது கல்லூரி நண்பர் டி.பி.கஜேந்திரன் மறைவு வருத்தமளிக்கிறது” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கல்லூரி நண்பரை காப்பாற்ற இறுதிவரை போராடிய முதல்வர் ஸ்டாலின் 

”எனது கல்லூரி நண்பர் டி.பி.கஜேந்திரன் மறைவு வருத்தமளிக்கிறது” என்று  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குநர்,  நடிகருமான டி.பி.கஜேந்திரன் உடல் நலக்குறைவால் இன்று காலை மரணமடந்தார். இவர் கே.பாலசந்தர், விசு. ராம நாராயணன் ஆகிய இயக்குநர்கள் இயக்கத்தில் நடித்தார். மேலும் இவர் 60 –க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரது இறுதி சடங்கு நாளை சென்னை, சாலிகிராமத்தில் நடைபெற உள்ளது. இவரும் முதல்வர் ஸ்டாலினும் நண்பர்கள். முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக ஸ்டாலின், “எனது கல்லூரி நண்பர் டி.பி.கஜேந்திரன் மறைவு வருத்தமளிக்கிறது. கலையுலகிற்கு தனது சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தவர் டி.பி.கஜேந்திரன். அவரது குடும்பத்தினர் மற்றும் திரையுலகினருக்கு ஆழ்ந்த இரங்கல் ” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும்  முதல்வர் ஸ்டாலின் நெரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Mk stalin condelence to his friend t p gajendran