Advertisment

இந்தி தெரியாதா? கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண்ணை மிரட்டிய சி.ஐ.எஸ்.எஃப் விரர்; ஸ்டாலின் கடும் கண்டனம்

தமிழகத்தைச் சேர்ந்த சர்மிளா என்ற பெண் இந்தி தெரியாது என்றதற்காக, கோவா விமான நிலையத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரரால் மிரட்டப்பட்ட சம்பவத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Cyclone Michaung TN CM MK Stalin gave one month salary to Relief Fund Tamil News

மு.க. ஸ்டாலின்

தமிழகத்தைச் சேர்ந்த சர்மிளா என்ற பெண் இந்தி தெரியாது என்றதற்காக, கோவா விமான நிலையத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரரால் மிரட்டப்பட்ட சம்பவத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழகத்தைச் சேர்ந்த சர்மிளா என்ற பெண் குடும்பத்துடன் கோவாவில் சுற்றுலாவை முடித்துவிட்டு, திரும்பும்போது கோவா விமான நிலையத்தில், பரிசோதனையின்போது, மத்திய தொழிற் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எஃப்) வீரர் ஒருவர் இந்தியில் பேசியுள்ளார். அதற்கு ஷர்மிளா தனக்கு இந்தி தெரியாது என்று கூறியதற்கு, அந்த சி.ஐ.எஸ்.எஃப் வீரர், நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டதற்கு தமிழ்நாட்டில் இருந்து வருவதாக ஷர்மிளா பதிலளித்துள்ளார். அதற்கு, சி.ஐ.எஸ்.எஃப் வீரர் நக்கலாக அச்சா எனக் கூறி, “தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கு, அப்ப ஹிந்தி தெரியுனும்ல, ஹிந்தி தேசிய மொழி, நீங்க கண்டிப்பா ஹிந்தி கத்துக்கணும்” என்று மிரட்டும் விதமாகக் கூறியுள்ளார். 

மேலும், அவர் கூகுள் பண்ணி பாருங்கள் என்று கூறியுள்ளார். இதற்கு ஷர்மிளா கூகுள் செய்து இந்திய தேசிய மொழி அல்ல அலுவல் மொழிதான் என்று கூறியுள்ளார். ஆனாலும், அங்கே இருந்த சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள், இந்தி தேசிய மொழிதான், நீங்க இந்தி கத்துக்கனும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து, ஷர்மிளா, சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி அறைக்குச் சென்று புகார் அளித்துள்ளார். அவரிடம் சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி மன்னிப்புக் கேட்டுள்ளார். இது தொடர்பாக, ஊடகங்களிடம் பேட்டி அளித்த ஷர்மிளா, இது போன்றவர்களின் இந்தி திணிப்பு நடத்தையால், இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசைகூட போய்விட்டது என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த சர்மிளா என்ற பெண் இந்தி தெரியாது என்றதற்காக சி.ஐ.எஸ்.எஃப் வீரரால் அவமதிக்கப்பட்ட சம்பவம் சமூக வலதளங்களில் கடும் கண்டனங்களை ஈர்த்து சர்ச்சையாகி உள்ளது. 

கோவா விமான நிலையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சர்மிளா என்ற பெண் இந்தி தெரியாது என்றதற்காக, மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரரால் மிரட்டப்பட்ட சம்பவத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

.

இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “கோவா விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எஃப். வீரர் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் 

சி.ஐ.எஸ்.எஃப் வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளார். "தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது" என்றும், "இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்" என்றும் பாதுகாப்புப் படை வீரர் பாடம் எடுத்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.

இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது?

பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

அதே போல, அமைச்சர் உதயநிதி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “கோவா விமான நிலையத்தில்  சி.ஐ.எஸ்.எஃப் @CISFHQrs
 வீரர்கள் இந்தியில் பேசியது புரியவில்லை என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறிய போது, அவர் குழந்தையுடன் வந்திருக்கிறார் என்றும் பாராமல், “இந்தி தான் தேசிய மொழி. இது கூட தெரியாதா” என கூகுள் செய்து பார்க்கச் சொல்லி வற்புறுத்தி - மிரட்டிய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

விமான நிலையங்களில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதை இனியும் ஏற்க முடியாது. பாதுகாப்புக்குத்தான் மத்திய தொழில்படையே தவிர - இந்தி பாடம் நடத்துவதற்கு அல்ல.

பல மொழிகள் பேசப்படும் இந்திய ஒன்றியத்தில் பிறமொழிப் பேசும் மக்கள் மீது இந்தியை தொடர்ந்து திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இத்தகைய போக்கினை ஒன்றிய அரசு கைக்கட்டி வேடிக்கை பார்க்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மொழியுரிமையும் மனித உரிமையே என்பதை பாசிஸ்ட்டுகள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று வேண்டும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தி திணிப்பு நிறுத்த வேண்டும் #StopHindiImposition என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Hindi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment