சீமான் மற்றும் திருமுருகன் காந்தி ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் முகநூலில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Advertisment
சீமான் உள்பட நாம் தமிழர் கட்சியின் இருப்பதிற்கும் மேற்பட்ட நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்குகள், இந்தியாவில் தற்காலிகமாக தடை செய்வதாக ட்விட்டர் நிறுவனம் நேற்று அறிவித்தது. மத்திய அரசின் அறிவுறுத்தலில் சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவரது முகநூலில் “ நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
Advertisment
Advertisement
கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்!” என்று அவர் பதிவிட்டுள்ளார்
இந்நிலையில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ட்விட்டர் கணக்கு முன்பே தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“