ஆவின் தயிரில் தஹி என்ற இந்தி பெயரை அச்சிடக் கூறிய FSSAI-க்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் FSSAI,குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள் என்று எச்சரித்துள்ளார்.
ஆவின் தயிரில் தஹி என்ற இந்தி பெயரை அச்சிடக் கூறிய FSSAI-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீண்ட வேண்டாம்; தொலைந்து விடுவீர்கள்' என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனத்தின் தயிர் பாக்கெட்டில், தஹி என்ற இந்தி வார்த்தையைக் குறிப்பிட வேண்டும் எனக் கூறிய மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு (FSSAI) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆவின் தயிர் பாக்கெட்டில் (Dahi) தஹி என இந்தியில் குறிப்பிட வேண்டும் என்று உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாடு ஆணையமான FSSAI, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களின் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்களுக்கு கடிதம் எழுதி உள்ளது.
மேலும், அரசு கூட்டுறவு சங்கங்களான ஆவின், நந்தினி, பாண்ட்லே தயிர் பாக்கெட் மீது (Dahi) தஹி என இந்தியில் அச்சிட FSSAI அறிவுறுத்தி இருந்தது.
இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு (FSSAI) கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் ‘தஹி‘ என இந்தியில் எழுத அறிவுறுத்திய மத்திய அரசு நிறுவனமான FSSAI-க்கு டிவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் ட்விட்டரில், “எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் #FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். மக்களின் உணர்வுகளை மதியுங்கள்!’#இந்தி திணிப்பை நிறுத்துங்கள்’ குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம். தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்” என தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் இந்தியில் ‘தஹி’ என அச்சிட இயலாது என தமிழக அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"