”கழகம் இல்லாத தமிழகமாம்! ஏ களவாணி பசங்களா!”: பாஜகவை சாடிய ஸ்டாலின்

”திராவிட இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது”, என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.

”திராவிட இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது”, என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

கடலூரில் நேற்று நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பஜகவை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். அப்போது, அவர் பேசியதாவது, ”திராவிட இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது எத்தனையோ வரலாறு உள்ளது.”, என கூறினார்.

மேலும், “மிகவும் சாதாரணமாக சொல்கிறார்கள். கழகம் இல்லாத தமிழகமாம். நீங்களே ஒரு மேடை அமைத்து பேசுவதற்கு திராணியை உருவாக்கி தந்தது இந்த திராவிட மண். மறந்துவிடாதீர்கள்”, என பேசினார். அப்போது, ‘களவாணி பசங்களா’, ‘புறம்போக்கு’ ஆகிய வார்த்தைகளை மு.க.ஸ்டாலின் உபயோகித்தார்.

“கழகம் இல்லாதம் தமிழகத்தை அமைப்போம்”, என்பதுதான் தமிழகத்தில் பாஜகவின் முழக்கமாக உள்ளது. பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த முழக்கத்தையே அனைத்து மேடைகளிலும் பேசி வருகின்றனர். அவர்களுக்கும், பாஜகவுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாகவே ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி: நியூஸ் 7

இதுகுறித்து, தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள எச்.ராஜா, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வைப்புத் தொகையை இழந்ததாலேயே, ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

×Close
×Close