மு.க.ஸ்டாலின், பிப்.1 முதல் நிர்வாகிகளுடன் ஆலோசனை : ‘நமக்கு நாமே’ பயணம் ரத்து

மு.க.ஸ்டாலின், மாவட்டம் வாரியாக திமுக நிர்வாகிகளுடன் 32 நாட்கள் ஆலோசனை மேற்கொள்கிறார். பிப்ரவரி 1-ம் தேதி அவரது ஆலோசனை தொடங்க இருக்கிறது.

மு.க.ஸ்டாலின், மாவட்டம் வாரியாக திமுக நிர்வாகிகளுடன் 32 நாட்கள் ஆலோசனை மேற்கொள்கிறார். பிப்ரவரி 1-ம் தேதி அவரது ஆலோசனை தொடங்க இருக்கிறது.

மு.க.ஸ்டாலின், பிப்ரவரியில் மாநிலம் முழுவதும் ‘நமக்கு நாமே’ பயணம் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது அந்தப் பயணத்தை ரத்து செய்துவிட்டு, மாவட்டம் வாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து சென்னையில் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. கட்சியினரை உள்ளாட்சித் தேர்தலுக்கு தயார் படுத்தும் விதமாக இந்த நடவடிக்கையை ஸ்டாலின் முன்னெடுக்கிறார்.

மு.க.ஸ்டாலின் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்கள் குறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தி.மு.க. பணிகள் குறித்து மாவட்ட வாரியாக ஊராட்சி செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரையுள்ள நிர்வாகிகள் மற்றும் தி.மு.க.வின் அனைத்து துணை அமைப்புகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களையும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆய்வு கூட்டம் நடத்த இருக்கிறார்.

கட்சி பணிகளை செம்மைப்படுத்த நடைபெறும் இக்கூட்டம் மாவட்ட வாரியாக கீழ்க்கண்ட அட்டவணைப்படி குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும் என்றும், தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் எனவும் தலைமை கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1.2.2018-ந்தேதி காலை- கோவை மாநகர் வடக்கு, கோவை மாநகர் தெற்கு, மாலை- நீலகிரி.

3-ந்தேதி:- காலை- கோவை வடக்கு, மாலை- கோவை தெற்கு.

7-ந்தேதி:- காலை- ஈரோடு வடக்கு, மாலை- ஈரோடு தெற்கு.

8-ந்தேதி:- காலை திருப்பூர் வடக்கு, மாலை- திருப்பூர் தெற்கு.

9-ந்தேதி:- காலை- சேலம் கிழக்கு, மாலை-சேலம் மேற்கு.

10-ந்தேதி:- காலை- சேலம் மத்தி, மாலை- தருமபுரி.

12-ந்தேதி:- காலை – நாமக்கல் கிழக்கு, மாலை- நாமக்கல் மேற்கு.

13-ந்தேதி :- காலை- திருச்சி வடக்கு, மாலை- திருச்சி தெற்கு.

14-ந்தேதி:- காலை- பெரம்பலூர், மாலை- அரியலூர்.

15-ந்தேதி:- காலை- கரூர், மாலை- திருவாரூர்.

16-ந்தேதி:- காலை – புதுக்கோட்டை வடக்கு, மாலை- புதுக்கோட்டை தெற்கு.

21-ந்தேதி:- காலை- தஞ்சை வடக்கு, மாலை- தஞ்சை தெற்கு.

22-ந்தேதி:- காலை- நாகை வடக்கு, மாலை- நாகை தெற்கு.

23-ந்தேதி:- காலை- மதுரை மாநகர் வடக்கு, மதுரை மாநகர் தெற்கு.

27-ந்தேதி:- காலை- மதுரை வடக்கு, மாலை- மதுரை தெற்கு

28-ந்தேதி :- காலை- ராமநாதபுரம், மாலை- சிவகங்கை.

2.3.2018-ந்தேதி:- காலை- தேனி, மாலை- திருநெல்வேலி மத்தி.

3-ந்தேதி:- காலை- திருநெல்வேலி கிழக்கு, மாலை- திருநெல்வேலி மேற்கு.

5-ந்தேதி:- காலை- விருதுநகர் வடக்கு, மாலை- விருதுநகர் தெற்கு.

7-ந்தேதி:- காலை- தூத்துக்குடி வடக்கு, மாலை- தூத்துக்குடி தெற்கு.

9-ந்தேதி:- காலை- கன்னியாகுமரி கிழக்கு, மாலை- கன்னியாகுமரி மேற்கு.

10-ந்தேதி:- காலை- திண்டுக்கல் கிழக்கு, மாலை- திண்டுக்கல் மேற்கு.

11-ந்தேதி:- காலை- திருவண்ணாமலை வடக்கு, மாலை- திருவண்ணாமலை தெற்கு.

12-ந்தேதி:- காலை- விழுப்புரம் வடக்கு, மாலை- விழுப்புரம் தெற்கு.

13-ந்தேதி:- காலை- வேலூர் கிழக்கு, மாலை- வேலூர் மேற்கு.

14-ந்தேதி:- காலை- வேலூர் மத்தி, மாலை- விழுப்புரம் மத்தி.

15-ந்தேதி:- காலை- கடலூர் கிழக்கு, மாலை- கடலூர் மேற்கு.

16-ந்தேதி:- காலை- கிருஷ்ணகிரி கிழக்கு, மாலை- கிருஷ்ணகிரி மேற்கு.

17-ந்தேதி:- காலை- காஞ்சீ புரம் வடக்கு, மாலை- காஞ்சீபுரம் தெற்கு.

18-ந்தேதி:- காலை- திருவள்ளூர் வடக்கு, மாலை- திருவள்ளூர் தெற்கு.

20-ந்தேதி:- காலை- சென்னை மேற்கு, மாலை- சென்னை தெற்கு.

22-ந்தேதி:- காலை- சென்னை வடக்கு, மாலை- சென்னை கிழக்கு.

இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் தோல்வியை தொடர்ந்து மாநிலம் முழுவதும் நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் திட்டமாக இந்த முயற்சியை ஸ்டாலின் மேற்கொண்டிருக்கிறார். அதாவது, இப்போது நமக்கு நாமே பயணம் மூலமாக மக்களை சந்திப்பதைவிட, கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்துவதுதான் முக்கியம் என அவர் முடிவுக்கு வந்திருப்பதாக கருதப்படுகிறது.

தவிர, நமக்கு நாமே பயணம் சென்றால் கட்சியினர் பெரும் தொகை செலவு செய்ய நேரிடும். ஏற்கனவே கடந்த 7 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத சூழலிலும், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் என பெரும் தொகையை கட்சி நிர்வாகிகள் செலவு செய்திருக்கிறார்கள். கட்சி நிர்வாகிகளுக்கு மேலும் அதிக சுமை ஏற்றுவதை தவிர்க்கவும் இந்த முடிவை ஸ்டாலின் எடுத்ததாக கூறப்படுகிறது.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close