கொங்கு மண்டல டூர்… கோவில் தரிசனம்… ஸ்டாலின் ரெடி?

MK Stalin News: கோவிலை மறைத்து ஸ்டாலினுக்கு மேடை அமைக்கப்படுவதாகக் கூறி, இந்து முன்னணி உள்ளூர் பிரமுகர்கள் காவல் நிலையத்தை அணுகியிருக்கிறார்கள்.

By: January 1, 2021, 3:42:54 PM

MK Stalin News: கொங்கு மண்டலம் செல்லவிருக்கும் ஸ்டாலின் அங்கு பெருமாள் கோவில் செல்ல இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. இங்கு ஸ்டாலின் நெற்றியில் கோவில் பிரசாதம் பூசுவாரா? என்கிற விவாதங்களையும் சமூக வலைதளங்களில் காண முடிகிறது.

திமுக.வுக்கு, அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் கோவில் சார்ந்த சர்ச்சைகள் புதிதல்ல. சனிக்கிழமை (ஜனவரி 2) கொங்கு மண்டலத்தில் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பரமேஸ்வரன் பாளையத்தில் திமுக சார்பிலான மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்கிறார் ஸ்டாலின். இதற்காக அந்த ஊரில் கொங்கு திருப்பதி என அழைக்கப்படும் பெருமாள் கோவில் முன்பாக மேடை அமைப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இதற்கிடையே பரமேஸ்வரன் பாளையம் வரும் ஸ்டாலின் மேற்படி கோவிலுக்கும் செல்ல இருப்பதாக திமுக.வினர் மத்தியில் பேசப்படுகிறது. இந்துக்களுக்கு எதிரானவராக ஸ்டாலினை சித்தரிக்கும் முயற்சிக்கு முடிவு கட்ட இது போன்ற நிகழ்ச்சிகளை ஐ பேக் வடிவமைத்துக் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் பட்டர்கள் பூசிய விபூதியை முன்பு ஸ்டாலின் அழித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த முறை அப்படி எதுவும் இல்லாமல், கோவில் பிரசாதத்தை ஸ்டாலின் ஏற்றுக்கொள்ளவும் வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.

இதற்கிடையே மேற்படி கோவிலை மறைத்து ஸ்டாலினுக்கு மேடை அமைக்கப்படுவதாகக் கூறி, இந்த நிகழ்ச்சியை தடை செய்ய இந்து முன்னணி உள்ளூர் பிரமுகர்கள் காவல் நிலையத்தை அணுகியிருக்கிறார்கள். இதனால் ஸ்டாலினின் கொங்கு மண்டல பயணம் பரபரப்பான எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Mk stalin dmk grama sabha meeting thondamuthur parameswaran palayam row

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X