ரஜினியிடம் நேரில் நலம் விசாரித்த மு.க. ஸ்டாலின்

மருத்துவர்களிடம் ரஜினிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்டறிந்தார்.

மருத்துவர்களிடம் ரஜினிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்டறிந்தார்.

author-image
WebDesk
New Update
ரஜினியிடம் நேரில் நலம் விசாரித்த மு.க. ஸ்டாலின்

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். முதலில் அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காகவே அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

Advertisment

பின்னர், ரஜினிக்கு ரத்த குழாய் திசு அழிவு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ நிர்வாகம் தகவல் தெரிவித்தது. அவர் உடல்நிலை சீராக உள்ளதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து நேரில் சென்று விசாரித்தார். மேலும், மருத்துவர்களிடம் ரஜினிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்துள்ளார்.

ஏற்கனவே, முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "அருமை நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப விழைகிறேன்" என பதிவிட்டிருந்தார்

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mk Stalin Rajinikanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: