Advertisment

அதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி

கோவையில் அதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்துக்குள்ளானதில் லாரி மோதி கால் இழந்த பெண்ணை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதோடு அவருக்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MK Stalin gives rs 5 lakh, rajeswari lost her leg in falgpole slided accident, மு.க.ஸ்டாலின், அதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்து, ராஜேஸ்வரி, மு.க.ஸ்டாலின் நிதியுதவி, aiadmk falgpole slides, coimbotore, dmk, admk flagpole, rajeswari

MK Stalin gives rs 5 lakh, rajeswari lost her leg in falgpole slided accident, மு.க.ஸ்டாலின், அதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்து, ராஜேஸ்வரி, மு.க.ஸ்டாலின் நிதியுதவி, aiadmk falgpole slides, coimbotore, dmk, admk flagpole, rajeswari

கோவையில் அதிமுக கொடி கம்பம் சரிந்து லாரி மோதி கால் இழந்த பெண்ணை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதோடு அவருக்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

Advertisment

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி. இவர் கடந்த 11 ஆம் தேதி கோவை அவினாசி சாலை கோல்ட்வின்ஸ் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது சாலையோரத்தில் நடப்பட்டிருந்த அதிமுக கட்சி கொடி கம்பம் கீழே விழுந்ததாகவும் அப்போது கொடி கம்பத்தின் மீது ஏறாமல் இருக்க வாகனத்தை பதட்டத்துடன் திருப்பியபோது, எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரியில் ராஜேஸ்வரியின் கால்கள் சிக்கி விபத்துக்குள்ளானது. இதில், அவரின் இரண்டு கால்களிலும் பலத்த காயமடைந்தது. ராஜேஸ்வரின் கால் மிக மோசமாக காயமடைந்திருந்ததால் அவருடைய இடது கால் அகற்றப்பட்டது.

அண்மையில், சென்னை பள்ளிக்கரணையில் சுபஸ்ரீ என்ற பெண் அதிமுக நிர்வாகி வைத்த பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற பெண் விபத்துக்குள்ளாகி பலியானார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கோவையில் கொடி கம்பம் விழுந்து விபத்துக்குள்ளாகி ராஜேஸ்வரி என்பவர் இரண்டு கால்களையும் இழந்த நிகழ்வு பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கோவையில் கொடி கம்பம் விழுந்து லாரி மோதி கால்களை இழந்த ராஜேஸ்வரியையும் அவரது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், அவருக்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார். அனுராதாவிற்கு செயற்கை கால் பொறுத்துவதற்கான முழு செலவையும் திமுக ஏற்கும் எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “அதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்துக்குள்ளாகி லாரி மோதி பெண் கால் இழந்துள்ளார். கொடி கம்பம் நட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. ஒரு எதிர்க்கட்சி தலைவராக நான் அரசுக்கு விடுக்கும் வேண்டுகோள். இந்த பெண் கால் இழந்துள்ளார். அவர் பூரண நலம் பெறும் வரை அவருடைய மருத்துவ செலவும் மற்றும் தேவையானவற்றை தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். அவருக்கு உயர் சிகிச்சை அளித்து அவருடைய குடும்பத்தினருக்கு உதவி செய்ய வேண்டும். இது என்னுடைய வேண்டுகோள்” என்று கூறினார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “அதிமுக கொடிக் கம்பம் சரிந்ததால் விபத்துக்குள்ளாகி, கால்கள் அகற்றப்பட்டுள்ள அனுராதாவுக்கு ஆறுதல் கூறினேன். திமுக சார்பில் நிதியுதவி வழங்கி அவருக்கு செயற்கைக் கால் பொருத்தவும் உதவப்படும் என உறுதியளித்தேன். அதிமுக சார்பில் ஆறுதல் கூட இல்லை, இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடாது” என பதிவிட்டுள்ளார்.

Mk Stalin Dmk Aiadmk Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment