Advertisment

மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு; ஏப்ரல் 8-ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகளின் விசாரணையை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியதோடு, வரும் ஏப்ரல் 8-ம் தேதி ஸ்டாலினை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Villupuram minor girl dies after burning with petrol, aiadmk councillor arrested, admk functionaries, mk stalin, dmk president mk stalin, dmk, முக ஸ்டாலின், திமுக, முக ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு, எம்பி எம்எல்ஏ நீதிமன்றம், tamil nadu govt defamation case against stalin, திமுக, defamation case transferred to mp mla special court, court news, tamil news, chennai news, tamil news tamil latest news

mk stalin, dmk president mk stalin, dmk, முக ஸ்டாலின், திமுக, முக ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு, எம்பி எம்எல்ஏ நீதிமன்றம், tamil nadu govt defamation case against stalin, திமுக, defamation case transferred to mp mla special court, court news, tamil news, chennai news, tamil news tamil latest news

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகளின் விசாரணையை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியதோடு, வரும் ஏப்ரல் 8-ம் தேதி ஸ்டாலினை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை...

மாநகராட்சி டெண்டர்கள் குறித்தும், மத்திய அரசின் தரவரிசை பட்டியலின் படி மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதற்கான குறியீடுகளில் தமிழகம் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்க பட்டது குறித்தும், குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாகவும் தமிழக அரசை விமர்சித்து மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பான செய்தி முரசொலி நாளிதழில் முறையே செப்டம்பர் 4, டிசம்பர் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் செய்தி வெளியானது.

சிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை...

அதனை தொடர்ந்து, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறாக பேசிய மு.க.ஸ்டாலினை அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.

இந்த வழக்குகளில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மு.க.ஸ்டாலினுக்கு அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பிய நிலையில், சம்மனை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இந்த அவதூறு வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு மனு தாக்கல் செய்துள்ளதால்,

இன்று நடைபெறும் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கோரினார்.

ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிபதி, ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் இந்த வழக்கை சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றுவதாகவும். ஏப்ரல் 8-ம் தேதி வழக்கு விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Mk Stalin Dmk Tamil Nadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment