கள்ளக்குறிச்சி விவகாரம்; எதிர்க்கட்சிகள் மலிவான அரசியல்: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

அவையில் இருந்து கேட்க மனமில்லாமல் அரசியல் ஆதாயங்களுக்காக வெளியேறியவர்கள் இந்தக் காணொளியைக் காணட்டும் என எக்ஸ் தளத்தில் மு.க. ஸ்டாலின் காணொலி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
MK Stalin has accused that the opposition parties have done bad politics in Kallakurichi issue

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மோசமாக அரசியல் செய்துள்ளனர் என தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாடு சட்டப்பேரவை அவையில் இருந்து கேட்க மனமில்லாமல் அரசியல் ஆதாயங்களுக்காக வெளியேறியவர்கள் இந்தக் காணொளியைக் காணட்டும் என மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், “சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவுற்றதும் கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றிப் பேசப்படும் என்பதை அறிந்தே, வெளிநடப்பு எனும் மலிவான அரசியலை எதிர்க்கட்சியினர் செய்துள்ளனர்.
முதலமைச்சர் இராஜிநாமா செய்ய வேண்டும் என்று சொன்னவர்களுக்கு, எங்கும் ஓடி ஒளியாமல் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஜூன் 19 மற்றும் ஜூன் 20 ஆகிய தேதிகளில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதாகக் கூறப்படும் நிகழ்வில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளியும் அடங்குவர். மேலும் 82 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisment

இந்தச் சோகத்தை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன் குமார் ஜாதவத்தை இடமாற்றம் செய்தது. மேலும், காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவை இடைநீக்கம் செய்துள்ளது.
மேலும், இந்த துயர சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ₹50,000 நிவாரணம் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Mk Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: