MK Stalin Health Updates: மோடி தமிழகம் வருகை... ஸ்டாலின் கோரிக்கை மனு

லேசான தலைச்சுற்றல் காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மேலும் 3 நாட்கள் ஓய்வெடுக்க முதலமைச்சருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

லேசான தலைச்சுற்றல் காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மேலும் 3 நாட்கள் ஓய்வெடுக்க முதலமைச்சருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MK Stalin PM Modi

MK Stalin Health Updates: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியின்போது அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

லேசான தலைச்சுற்றல் காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்குத் தேவையான அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனைகளுக்குப் பிறகு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 3 நாட்கள் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். முதலமைச்சரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Jul 26, 2025 13:59 IST

    மோடி தமிழகம் வருகை... ஸ்டாலின் கோரிக்கை மனு

    தமிழக முதல்வர் ஸ்டாலின், சிகிச்சைக்கு பின் ஓய்வில் இருந்து வரும் நிலையில், அவர் மருத்துவமனையில் இருந்தபடி அலுவல் பணியை தொடங்கினார். மருத்துவமனை வருகை தந்த தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

    இதனைத் தொடர்ந்து, தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனு கொடுக்க உள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் உள்ள நிலையில் அவர் சார்பில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமர் மோடியிடம் கொடுக்கிறார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், "மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமரிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தலைமைச் செயலாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பியுள்ளேன். மனுவை அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமரிடம் வழங்குவார்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jul 26, 2025 11:39 IST

    மருத்துவமனையில் இருந்தபடி அலுவல் பணியை தொடங்கிய ஸ்டாலின் - அதிகாரிகளுடன் ஆலோசனை

    தமிழக முதல்வர் ஸ்டாலின், சிகிச்சைக்கு பின் ஓய்வில் இருந்து வரும் நிலையில், அவர் தற்போது  மருத்துவமனையில் இருந்தபடி அலுவல் பணியை தொடங்கி இருக்கிறார். தலைமைச் செயலாளர் முருகானந்தம் மருத்துவமனை வருகை தந்துள்ளார். அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். 



  • Advertisment
    Advertisements
  • Jul 24, 2025 17:14 IST

    "முதலமைச்சருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது"

    முதலமைச்சருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது அவர் நலமாக உள்ளார், வழக்கமான பணிகளை 2 நாட்களில் மேற்கொள்வார். முதல்வருக்கு இதயத்துடிப்பில் சில வேறுபாடுகள் காரணமாகவே, தலைசுற்றல் ஏற்பட்ட‌து கண்டறியப்பட்டது. மருத்துவர் செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழு அறிவுரையின்படி ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது என அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. 



  • Jul 24, 2025 14:54 IST

    மு.க.ஸ்டாலின் விரைவில் வீடு திரும்ப வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

    மு.க.ஸ்டாலின் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

     



  • Jul 24, 2025 12:55 IST

    ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை - அமைச்சர் துரைமுருகன் தகவல்

    தமிழக முதலஅமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 4-வது நாளாக இன்றும் முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர் சிகிச்சையில் உள்ளார். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வீடு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    இந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் துரைமுருகன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையில் எந்தவொரு சிறிய அடைப்பும் இல்லை. ஆஞ்சியோ பரிசோதனைக்குப் பிறகு முதல்-அமைச்சர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். ஒரு பிரச்சினையும் இல்லை. முதலமைச்சர் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பதை மருத்துவர்களே சொல்வார்கள்" என்று அவர் கூறினார்.



  • Jul 24, 2025 12:50 IST

    ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை: அமைச்சர் துரைமுருகன் தகவல்

    முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அவர், அதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது, ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டதாகவும், எந்தவொரு சிறிய அடைப்பும் இன்றி அவர் முழு உடல் நலனுடன் இருப்பதகவும் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார். 



  • Jul 23, 2025 15:47 IST

    ஸ்டாலின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை

    முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் மற்றும் வதந்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்போலோ மருத்துவமனை தரப்பு அறிக்கையை தவிர மற்ற தகவல்கள் உண்மை இல்லை என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரித்துள்ளது



  • Jul 23, 2025 14:33 IST

    மருத்துவமனையில் இருந்தபடி பணி... காணொளிக் காட்சி மூலம் மக்களிடம் பேசிய ஸ்டாலின்

    இன்று 2-வது நாளாக மருத்துவமனையில் இருந்தபடியே காணொலி காட்சி வாயிலாக பொதுமக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். ஸ்ரீபெரும்புத்தூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் கலந்து கொண்ட மக்களிடம் குறைகளை கேட்டும், அவர்களுக்கு தீர்வு கிடைத்தது குறித்தும் முதல்-அமைச்சர் கேட்டறிந்தார். அப்போது பயணாளிகள் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

    அதனை தொடர்ந்து "உங்களுடன் ஸ்டாலின்" திட்டப் பணிகள் குறித்து கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கோவை மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்-அமைச்சர் காணொலி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார். முகாம்களுக்கு மனுக்களை அளிக்க வரும் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் பெறப்படும் மனுக்களின் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் எந்தவித தொய்வுமின்றி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "மருத்துவமனையில் இருந்தபடியே உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்ததோடு; அரசுக் கோப்புகளிலும் கையெழுத்திட்டேன். மருத்துவர்கள் அறிவுறுத்திய ஓய்வுக்குப் பிறகு, விரைவில் உங்களைச் சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன்" என்று தெரிவித்துள்ளார்.



  • Jul 23, 2025 11:36 IST

    ஸ்டாலினுக்கு சோர்வு தான் ஏற்பட்டது; நலமுடன் இருக்கிறார் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

    முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், மு.க. முத்து மறைவின் போது கூடுதலாக நேரம் செலவிட்டதால், அவருக்கு சோர்வு ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Jul 22, 2025 13:21 IST

    மருத்துவமனையில் இருந்தபடியே முதல்வர் ஆய்வு 

    உங்களுடன் ஸ்டாலின்” திட்டப்பணிகள் குறித்து மருத்துவமனையில் இருந்தபடியே தலைமைச்செயலாளர் உடன் முக்கிய அரசுப்பணிகள் குறித்தும் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் இது தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் எத்தனை?, மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் கேட்டறிந்தார்



  • Jul 22, 2025 13:16 IST

    முதல்வருக்கு திருஷ்டி உள்ளதாக கனவு வந்தது - கூல் சுரேஷ்

    "முதல்வருக்கு திருஷ்டி உள்ளதாக கனவு வந்தது அதனால் திருவண்ணாமலைக்கு பாதயாத்திரை செல்ல உள்ளேன்" என்று நடிகர் கூல் சுரேஷ் பேட்டியளித்துள்ளார். 

     



  • Jul 22, 2025 12:50 IST

    அரசுப் பணிகள் குறித்து மருத்துவமனையில் இருந்தபடியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

    அரசுப் பணிகள் குறித்து மருத்துவமனையில் இருந்தபடியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணி குறித்து தலைமைச் செயலாளருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் முகாம்களுக்கு மனுக்களை அளிக்க வரும் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.



  • Jul 22, 2025 11:44 IST

    ஸ்டாலின் 3 நாட்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல் - உதயநிதி தகவல்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

     



  • Jul 22, 2025 11:09 IST

    ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார் - உதயநிதி ஸ்டாலின் பேட்டி 

    "முதல்வர் ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார். முதலமைச்சர் ஸ்டாலின் நன்றாக இருக்கிறார். முதலமைச்சரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் விரிவான அறிக்கை தருவார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் குணம் அடைந்து வீடு திரும்புவார்" என்று சென்னையில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். 



  • Jul 22, 2025 10:13 IST

    கிரீம்ஸ் சாலை அப்போலோ திரும்பிய ஸ்டாலின் 

    முதல்மைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், கிரீம்ஸ் சாலை அப்போலோவில் இருந்து மீண்டும் தேனாம்பேட்டை அப்போலோவுக்கு முதல்வர் ஸ்டாலின் திரும்பியுள்ளார். 



  • Jul 22, 2025 09:37 IST

    ஸ்டாலின் குறித்து நெகிழ்ச்சியாக பேசிய துர்கா ஸ்டாலின்

    மருத்துவமனையில் இருந்து நேரலையை பார்த்துக்கொண்டு இருக்கிறார் முதலமைச்சர்; அவர் மனம் முழுவதும் இங்கே தான் இருக்கும்; அவரும் நானும் நூல் வெளியீட்டு விழாவில் துர்கா ஸ்டாலின் பேசியுள்ளார். 



  • Jul 22, 2025 08:42 IST

    தேனாம்பேட்டை அப்போலோவில் முதல்வருக்கு பரிசோதனை

    பரிசோதனைகளுக்காக தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனைக்கு முதல்வர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். நடைபயிற்சியின்போது தலைச்சுற்றல் ஏற்பட்டதால் ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார்.



  • Jul 22, 2025 08:16 IST

    3 நாள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு மேலும் மூன்று நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர் மருத்துவமனையில் இருந்தபடியே தனது அரசுப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 



  • Jul 22, 2025 08:16 IST

    அறிக்கை வெளியிட்ட அப்பல்லோ

    அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேலும் மூன்று நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். மருத்துவர்களின் பரிந்துரைப்படி சில பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. அவர் மருத்துவமனையில் இருந்தவாறே தனது பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று இரண்டாவது நாளாக முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார், மேலும் அவருக்கு வழக்கமான பரிசோதனைகளும் நடைபெற்று வருகின்றன.



  • Jul 22, 2025 08:16 IST

    ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார் - அமைச்சர்கள்

    முதலமைச்சரின் துணைவியார் துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்குச் சென்று முதலமைச்சரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். முதலமைச்சர் நலமுடன் இருப்பதாகவும், கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியான பணிகளின் காரணமாக ஏற்பட்ட சோர்வு காரணமாகவே இந்த லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தவாறே முக்கிய அரசுப் பணிகளை கவனிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  • Jul 22, 2025 08:15 IST

    அறிக்கை வெளியிட்ட இபிஎஸ்

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பூரணமாக நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்திப்பதாக மன்னார்குடியில் தேர்தல் சுற்றுப் பயண பரப்புரையில் பேசிய நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.



  • Jul 22, 2025 08:15 IST

    முதலைமைச்சருக்கு 2 ஆவது நாளாக சிகிச்சை

    70 வயதான முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை காலை தனது வழக்கமான நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றலை உணர்ந்தார். இதையடுத்து, அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். முதலமைச்சருக்குத் தேவையான அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று இரண்டாவது நாளாக ஸ்டாலின் சிகிச்சை பெற்று வருகிறார்.



  • Jul 22, 2025 08:14 IST

    மோடி போனில் அழைத்து நலம் விசாரிப்பு

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். முதலமைச்சர் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் முதலமைச்சரின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்துள்ளனர்.



  • Jul 22, 2025 07:37 IST

    3 நாட்கள் ஓய்வு தேவை

    லேசான தலைச்சுற்றல் காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்குத் தேவையான அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனைகளுக்குப் பிறகு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மூன்று நாட்கள் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். முதலமைச்சரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



  • Jul 22, 2025 07:37 IST

    மருத்துவமனை அறிக்கை

    ஸ்டாலின் உடல்நலம் குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது லேசாக தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது அறிகுறிகளுக்கு ஏற்ப அவருக்கு தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



  • Jul 22, 2025 07:36 IST

    ஸ்டாலின் அப்போலோவில் அனுமதி

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியின்போது அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Stalin CM stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: