திடீரென்று மருத்துவமனையில் அட்மிட் ஆன ஸ்டாலின்… என்ன காரணம்?

திராவிட முன்னேற்ற கழகம் விளக்கம் அளித்துள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள்

mk stalin hospitalised dmk mk stalin
mk stalin

mk stalin hospitalised dmk mk stalin : சென்னை கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டேரியில் நேற்றைய தினம் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பொதுமக்கள் 500 பேருக்கு மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, வடசென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பஅப்போது, ஸ்டாலின் திடீரென அங்கிருந்து புறப்பட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து, மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார்.

அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘எனக்கு லேசான மயக்கம் மற்றும் உடல் சோர்வு இருந்தது. அதனால் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்று ரத்த அழுத்தம் மற்றும் இசிஜி பரிசோதனை செய்து கொண்டேன். மற்றபடி எதுவும் இல்லை. நோ பிராப்ளம் என்று கூறிவிட்டு புறப்பட்டார்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக கொளத்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதி என்று தகவல் தவறானது என்று திராவிட முன்னேற்ற கழகம் விளக்கம் அளித்துள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நேற்றைய தினம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீரென உடல் சோர்வு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரத்த அழுத்தம், இசிஜி (ECG) பரிசோதனை செய்துகொண்டார்.சிறிது நேரம் ஓய்வெடுக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தினார். இதன்பின்னர், ஒருமணி நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு ஸ்டாலின் திரும்பினார். தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் என்று திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mk stalin hospitalised dmk mk stalin health condiyion stalin twitter dmk

Next Story
ஆண் இரண்டரை ஆண்டு, பெண் இரண்டரை ஆண்டு ஆட்சி சிறப்பு – அரங்கத்தை அதிர வைத்த ஓபிஎஸ்!ops admk ops speech
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X