மு.க. ஸ்டாலினுக்கு தனியார் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகசென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
Advertisment
மு.க. ஸ்டாலின் முதுகுவலி காரணமாக வழக்கமான மருத்துவப் பரிசோதனை மெற்கொள்வதற்காக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். அங்கே முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு சாதாரண பிரிவில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியானது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவனையில் பரிசோதனைகள் முடிந்து அவர் இன்றே மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு செல்வார் என்றும் அவருக்கு மருத்துவமனையில் சாதாரண பிரிவில் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்புக்காக மருத்துவமனை வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இது குறித்து தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவருடைய முதுகுவலியை பரிசோதனை செய்ய வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்” என்று தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"