Advertisment

கொரோனா தீவிர சிகிச்சையில் ஜெ.அன்பழகன்; நேரில் சென்று நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
dmk mla j anbazhagan covid-19 positive, dmk mla j anbazhagan, திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், முக ஸ்டாலின் நேரில் நலம் விசாரித்தார், உதயநிதி ஸ்டாலின், சென்னை, திமுக, கொரோனா வைரஸ், MK Stalin inquired dmk mla j anbazhagan, j anbazhagan admitted in hospital for covid-19, chennai, tamil nadu

திமுகவின் சென்னை மேற்கு மண்டலச் செயலாளரும் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வுமான ஜெ.அன்பழகன் தொகுதி மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கி வந்த நிலையில், அவருக்கு ஜூன் 2-ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள ரேலா தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

ஜெ.அன்பழகனுக்கு சுவாசக் கோளாறு காரணமாக வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவி மூலம் 80 சதவீத ஆக்ஸீஜனை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலையில் கடந்த 24 மணிநேரமாக எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் ஜூன் 4-ம் தேதி அறிக்கை வெளியிட்டது. இதனால், கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார் என்று செய்திகள் வெளியானது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிட்டார். அதில், ஜெ.அன்பழகன் விரைவில் குணமடைந்து மக்கள் பணியாற்ற வருவார் என கூறியிருந்தார்.

இதனிடையே, ஜெ.அன்பழகனின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது வெண்டிலேட்டர் மூலம் 60 சதவீத ஆக்ஸிஜன் பெற்றுவருவதாக திமுகவினர் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி ரேலா மருத்துவமனை இயக்குனரை தொடர்ப்பு கொண்டு ஜெ.அன்பழகனின் உடல்நிலை குறித்து விசாரித்தார். பின்னர், அவரது சிகிச்சைக்கு அரசுத் தரப்பில் என்ன உதவி வேண்டுமானலும் செய்யத் தயாராக இருப்பதாக கூறியதாக செய்தி வெளியானது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் ரேலா மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களிடம் ஜெ.அன்பழகனின் உடநிலை குறித்து நலம் விசாரித்தார்.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இன்று காலை 11 மணிக்கு ஜெ.அன்பழகன் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவருடைய உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Mk Stalin Dmk Udhayanidhi Stalin M K Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment