முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் சிலரின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அதனால், அமைச்சரவையில் மாற்றம் செய்ய தயாராகி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், அமைச்சரவை மாற்றத்தில் யார் யார் தலைகள் உருளப் போகிறதோ என்று சீனியர்கள் மத்தியில் கலக்கம் நிலவுகிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தி.மு.க அமைச்சர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றால், பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் என தி.மு.க வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன. சில மூத்த அமைச்சர்கள் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அதனால், அமைச்சரவையில் மாற்றங்கள் செய்ய தயாராகி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், மே 2-ம் தேதி நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டம் மிக முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது.
அதே நேரத்தில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆகியோர் விரைவில் ஓய்வு பெற உள்ளதால், உயர் அதிகாரிகள் மட்டத்தில் பெரிய சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், அமைச்சரவை மாற்றத்தின் போது, அரசு செயலர்களும் மாற்றப்படுவார்கள் என, தி.மு.க-வினர் தெரிவிக்கின்றனர்.
செயல்படாத அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மீது கருணை காட்டப்படாது என்றும், கடினமாக உழைத்து மக்களுக்கு நல்ல பணிகளைச் செய்ய வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்களிடம் கூறியதாக தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
மூத்த அமைச்சர்கள் சிலரின் செயல்பாடுகள் குறித்து ஸ்டாலின் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், இதனால், அமைச்சரவை மாற்றத்தில் பல தலைகள் உருளும் என்றும் கூறப்படுகிறது. மேலும், அரசுக்கு எதிரான சமீபத்திய சர்ச்சைகள், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்தும் கட்சித் ஸ்டாலின் வருத்தம் அடைந்துள்ளதாக தெரிவிக்கின்றன.
இந்த அமைச்சரவை மாற்றம் நடவடிக்கைக்கு காரணம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சமீபத்தில் தி.மு.க மாவட்டச் செயலர்களுடன் நடத்திய கூட்டத்துக்கு பின்னர் இந்த மாற்றம் திட்டமிடப்பட்டதாக தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எப்படியானாலும், சில அமைச்சர்களின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்த மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் மாற்றம் செய்ய தயாராகி வருவதால் யார் யார் தலை உருளும் என்று சீனியர்கள் மத்தியில் கலக்கம் நிலவுவதாகத் தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”