தாய்மாமா வீட்டிற்கு சென்ற ஸ்டாலின்… எதிர்பாராத வருகையால் சந்தோஷம் அடைந்த உறவினர்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கோவில் திருமாளம் கிராமத்தில் உள்ள அவருடைய தாய்மாமா வீட்டிற்கு தீடீரென சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கோவில் திருமாளம் கிராமத்தில் உள்ள அவருடைய தாய்மாமா வீட்டிற்கு தீடீரென சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதனால், ஸ்டாலின் தாய்மாமா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சந்தோஷம் அடைந்தனர்.
Advertisment
வடகிழக்கும் பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெள்ள பாதிப்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் பெய்த கனமழையால் சீர்காழி வெள்ளக்காடானது. இதனால், குடியிருப்புகள், வயல்வெளிகள் எல்லாம் நீரில் மழை வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில், மழை வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி சென்றார். அங்கே மழை வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள, கோவில் திருமாளம் கிராமத்தில் உள்ள மு.க. ஸ்டாலினின் தாய்மாமா தட்சிணாமூர்த்தி வீட்டுக்கு திடீரென வருகை தந்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் எதிர்பாராத வருகையால், அவருடைய தாய்மாமா தட்சிணாமூர்த்தி சந்தோஷத்தில் ஸ்டாலினை கட்டித் தழுவி அன்பை பரிமாறிக்கொண்டார்.
மு.க. ஸ்டாலினின் தாய்மாமா தட்சிணாமூர்த்தி நேற்று (நவம்பர் 13) தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருடைய 100வது பிறந்தநாளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வழியாக வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தபின், நன்னிலம் வட்டம், கோவில் திருமாளம் கிராமத்தில் உள்ள தனது தாய்மாமா தட்சிணாமூர்த்திக்கு திடீரென வருகை தந்தார். மு.க. ஸ்டாலினின் திடீர் வருகை அவருடைய தாய்மாமா மற்றும் குடும்பத்தினர் உறவினர்கள் சந்தோஷமடைந்தனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 100வது பிறந்தநாள் கொண்டாடிய தாய்மாமா தட்சிணாமூர்த்திக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, அவருடைய காலில் விழுந்து வணங்கினார்.
மேலும், அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்ட அமைச்சர்களும் மு.க.ஸ்டாலினின் தாய்மாமா தட்சிணாமூர்த்திக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது தாய்மாமாவின் 100வது பிறந்தாளுக்கு வாழ்த்து தெரிவித்து தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: “எனது தாய் மாமாவும் கழகப் பற்றாளருமான திரு. தட்சிணாமூர்த்தி அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவருக்கு 100-ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.
திருவாரூர் மாவட்டத்தில் எப்போது நான் சுற்றுப்பயணம் சென்றாலும், என் மீது மிகுந்த பாசமும், பற்றும் கொண்ட அவரைச் சந்தித்து நலம் விசாரிப்பேன். அவரும் நான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் வந்து என்னை நலம் விசாரிப்பார்.
தனது வாழ்நாளில் நூறாண்டுகளைக் கண்டுள்ள அவரது நினைவாற்றல் இன்றும் என்னை வியக்க வைக்கிறது. அந்த அளவிற்கு நடப்பு விவரங்களை விரல் நுனியில் வைத்து என்னைச் சந்திக்கும் நேரங்களில் பேசுவார்.
அவரது நூறாவது பிறந்தநாளான இன்று, அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர் நல்ல உடல்நலனுடன் எங்களோடு மேலும் பல்லாண்டு பயணித்திட இதயபூர்வமாக வாழ்த்துகிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"