மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படும் என்ற அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அறிவிப்பை வரவேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக மாநில மொழிகளை அறிவித்தால் மக்கள் பயன்பெறுவார்கள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பேச்சை குறிப்பிட்டு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். நாட்டில் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில் நீதிமன்ற விசாரணையை நேரலை நிகழ்வாக வெளியிட்டது. இது பல்வேறு தரப்பினராலும் வரவேற்கப்பட்டது மராட்டியம் மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கலந்துகொண்டு பேசினார் .
பொதுமக்கள் புரிந்துகொள்ள கூடிய ஒரு மொழியில் தீர்ப்பு விவரங்கள் சென்றடையாவிட்டால். நாங்கள் மேற்கொள்ளும் பணியானது நாட்டின் 99 % மக்களை சென்று சேராது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தி இதனை மேற்கொள்ள முடியும் என்று நீதிபதி கூறியுள்ளார்.