/indian-express-tamil/media/media_files/2025/08/27/stalin-rahul-2025-08-27-13-10-49.jpg)
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பீகாரில் முசாஃபர் நகரில் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ பேரணி புதன்கிழமை (27.08.2025) நடைபெற்றது. இந்த பேரணியில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ், கனிமொழி எம்.பி ஆகியோர் பங்கேற்றனர். Photograph: (x/RahulGandhi)
பீகாரில் வாக்காளர் பட்டியலை மறு சீரமைப்பதற்காக எஸ்.ஐ.ஆர் எனும், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் எனும் நடைமுறையை இந்திய தேர்தல் ஆணையம் நடைமுறை படுத்தியது. இதனால் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பீகாரில் வாக்கு திருட்டை கண்டித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பீகாரில் வாக்காளர் அதிகார யாத்திரை பேரணியை ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் நடத்தி வருகிறார். இந்த யாத்திரைக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்து தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பீகாரில் முசாஃபர் நகரில் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ பேரணி புதன்கிழமை (27.08.2025) நடைபெற்றது. இந்த பேரணியில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி ஆகியோர் பங்கேற்றனர்.
‘வாக்காளர் அதிகார யாத்திரை’யில் திறந்த வாகனத்தில் ராகுல் காந்தி, தேஜஸ்வி ஆகியோருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைந்து பேரணியாக சென்றார்.
‘வாக்காளர் அதிகார யாத்திரை’ பேரணியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, “இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து வரும்போது பீகார் போர்க்குரல் எழுப்புகிறது. ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளோம். உங்களை பார்க்க 2,000 கிலோமீட்டர் கடந்து வந்துள்ளேன்.
கடந்த ஒரு வாரமாக இந்தியாவே பீகாரை தான் பார்த்து வருகிறது. பீகாரின் வெற்றிக்கு நமது ஒற்றுமை அவசியம். ராகுல், தேஜஸ்வி செல்லும் இடமெல்லாம் மக்கள் கடல் போல் திரண்டு வருகின்றனர். மக்களை வாக்களிக்க விடாமல் பா.ஜ.க அரசு தடுக்கிறது. தேர்தல் ஆணையத்தை கீ கொடுக்கும் பொம்மையாக பா.ஜ.க அரசு மாற்றியுள்ளனர். பா.ஜ.க-வின் முறைகேடுகளுக்கு எதிராக முன்னெடுக்கும் போராட்டம், வாக்கு திருட்டு விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தால் பதிலளிக்க முடியவில்லை.
ராகுல் காந்தி எந்த மிரட்டலுக்கும் பயப்பட மாட்டார், அரசியலுக்காக பேசுபவர் அல்ல. பா.ஜ.க-வின் முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார் ராகுல் காந்தி. இந்தியா கூட்டணிக்கான அடித்தளம் பாட்னாவில் தான் அமைந்தது. 400 இடங்கள் கனவு கண்ட பா.ஜ.க-வை 240 இடங்களில் அடக்கியது இந்தியா கூட்டணிதான்; மெஜாரிட்டி என ஆட்டம் போட்டவர்கள் மைனாரிட்டி ஆட்சி நடத்தி வருகின்றனர். மக்கள் சக்திக்கு முன் எப்பேர்பட்ட சவ்வாதிகாரர்மும் மண்டியிட்டுதான் ஆக வேண்டும் என்பதை பீகார் மக்கள் நிரூபிக்க வேண்டும்.
ராகுல் காந்தி இந்தியாவிற்கான வழக்கறிஞராக திகழ்கிறார். உங்களால் இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும். பீகாரின் வெற்றி தான், இந்தியா கூட்டணியின் அடுத்தடுத்த வெற்றியாக அமையும்.” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.