Advertisment

சென்னை வந்த 16வது நிதிக் குழு; தமிழ்நாட்டின் முக்கிய சவால்களை சுட்டிக் காட்டிய மு.க. ஸ்டாலின்

சென்னை வந்துள்ள 16-வது நிதி ஆயோக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு நிதி ரீதியான சவால்களை சமாளிக்க உதவும் பரிந்துரைகளை வழங்க கோரிக்கை விடுத்தார்.

author-image
WebDesk
New Update
niti 16th xyz

16ஆம் நிதிக் குழுவின் பரிந்துரைகள், முந்தைய நிதி ஆயோக்குகளால் மாநிலத்திற்கு இழைக்கப்பட்ட அனைத்து நிலையான அநீதிகளுக்கும் பொருத்தமான தீர்வை வழங்க உதவும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இயற்கை பேரிடர்களின் தாக்கம், முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு, விரைவான நகரமயமாதலால் ஏற்படும் தேவைகள் என மூன்று முதன்மை சவால்களை தமிழகம் எதிர்கொள்கிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை (நவம்பர் 18, 2024) கூறினார், மேலும், நிதி ரீதியாக இந்த சவால்களை தமிழ்நாடு சமாளிக்க உதவும் பரிந்துரைகளை வழங்க 16-வது நிதி ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தார்.

Advertisment

சென்னை வந்துள்ள 16-வது நிதி ஆயோக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுகையில், “இயற்கை பேரிடர்களால் ஏற்பட்ட பாதிப்பால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல புயல்கள், கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்கள், உடைமைகள் மற்றும் வாழ்வாதாரம் மட்டுமல்ல, மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன” என்று மு.க. ஸ்டாலின் கூறினார். 

இது போன்ற இயற்கை பேரிடர்களின் பாதிப்பை சமாளிக்க அதிக அளவில் நிதி செலவிட வேண்டியுள்ளதால், பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முடியவில்லை. மேலும், நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாநில அரசுகளுக்கு நிதியை உறுதி செய்யும் நிதி ஆயோக்கின் பரிந்துரைகளுக்கு வாதிட்டார்.

முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் அது மாநிலத்தின் மக்கள்தொகையில் ஏற்படுத்தும் தாக்கத்தை சுட்டிக்காட்டிப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டின் மக்கள்தொகையின் சராசரி வயது தற்போது 36.4 ஆக உள்ளது. இது உத்தரபிரதேசத்துடன் ஒப்பிடும்போது 9.5 ஆண்டுகள் அதிகம் என்றார். “16-வது நிதி ஆணையத்தின் பதவிக்காலம் முடிவதற்குள், தமிழ்நாட்டின் மக்கள்தொகையின் சராசரி வயது 38.5 ஆக இருக்கும். அதற்குள் நாட்டிலேயே அதிக முதியோர்களைக் கொண்ட மாநிலமாக இது உருவாகும்” என்று கூறினார்.

இத்தகைய சூழல், இதுவரை தமிழகம் அதன் மக்கள்தொகைக்கு ஏற்ப பெறும் பலன்கள் விரைவாகக் குறைந்து வருவதையும், தமிழகத்தில் முதியோர்களுக்கான சமூக நல நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் பிரதிபலிக்கிறது என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.

“தமிழகத்தில் அதிகரித்து வரும் முதியோர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வரும் 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய வேண்டியிருந்தது. இல்லாவிட்டால், அதிக முதியோர் மக்கள்தொகை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடும், ஆனால், வளர்ந்த மாநிலம் என்ற அந்தஸ்தை அடையலாம்.” என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.

“நாட்டில் விரைவான நகரமயமாக்கலைக் கண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. பல்வேறு நகர்ப்புற உள்கட்டமைப்பை உருவாக்க தேவையான நிதியைத் திரட்டுவதும் எதிர்கொள்ளும் குறிப்பிடத்தக்க சவால்களில் ஒன்று” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

“மட்டுப்படுத்தப்பட்ட நிலம் மற்றும் நீர் வளங்கள் மற்றும் அதிகரித்து வரும் மக்கள்தொகை ஆகியவற்றைக் குறிப்பிட்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, குறிப்பாக, சென்னை போன்ற நகரங்களில், அடிப்படை வசதிகளை உறுதி செய்ய அதிக நிதிக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.” என்று கூறினார்.

மாநிலங்களின் நிதித் தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆனால், அவை ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்ததில் இருந்து வருவாய் ஈட்டுவதில் பல தடைகளை எதிர்கொண்டன. அதிகாரப் பகிர்வில் நிதி ஆயோக் ஆற்றிய பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் மு.க. ஸ்டாலின் கூறினார்.

மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுகையில், “இந்த நிதி ஆயோக் மீது தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 கோடி மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். மாநிலங்களின் வளர்ச்சியின் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்வதன் மூலம் கூட்டாட்சி முறையை வலுப்படுத்துவதற்கான அரிய வாய்ப்பை காலம் நமக்கு அளித்துள்ளது. 16-வது நிதிக் குழு இதை மனதில் வைத்து தகுந்த பரிந்துரைகளை வழங்கும் என்று நம்புகிறேன்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

16-வது நிதிக் குழுவின் பரிந்துரைகள், முந்தைய நிதி ஆயோக்குகளால் மாநிலத்திற்கு இழைக்கப்பட்ட அனைத்து நிலையான அநீதிகளுக்கும் பொருத்தமான தீர்வை வழங்க உதவும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment