விபத்தில் காயமடைந்தவரை துரிதமாக செயல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய ஸ்டாலின்!

விபத்தில் காயமடைந்தவரை மீட்ட ஸ்டாலின்

சென்னை கொளத்தூரில் சாலை விபத்தில் காயமடைந்த நபருக்கு தி.மு.க. செயல் தலைவா் மு.க.ஸ்டாலின் உதவி செய்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

தமிழக எதிா்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் ஆய்வு மேற்கொண்டாா். தொகுதி மேம்பாட்டு பணிகள் குறித்து ஸ்டாலின் ஆலோசனை செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பெரவல்லூா் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் என்பவர் இருசக்கரத்தில் வந்த போது சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தாா். இதையடுத்து, படுகாயமடைந்த செல்வராஜை ஆட்டோ ஒன்றின் மூலம் ஸ்டாலின் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

×Close
×Close