சென்னை அமைந்தகரையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது, " கருணாநிதிக்கு இன்று திருச்சியில் சிலை திறக்கப்பட்டுள்ளது. இதனை அன்பில் மகேஷ் திறந்து வைத்துள்ளார்.
இந்த தருணத்தில் மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கத்தை செலுத்துகிறேன். மொழிப்போர் களத்தில் தந்தை பெரியார் அண்ணா கருணாநிதி முன் நின்றனர்.
கருணாநிதி 12 வயதில் ஹிந்தி திணிப்பை எதிர்த்து களத்தில் நின்றார்; உலகில் வேறு எங்கும் இவ்வாறு ஒரு போராட்டம் நடைபெற்றதில்லை.
மொழிப்போர் போராட்டத்திற்கு பின்னர் தான் திமுக ஆட்சிக்கு வந்தது. மொழியின் பழம் பெருமையை பேசுவது மற்றும் மொழிப்பற்று ஆகாது.
பாஜக ஹிந்தியை திணிக்கிறது. கொரோனாவை விட கொடியது பாஜக அரசு; இந்த பாஜக அரசின் தோல்வி பட்டியல் மிக நீண்டது.
வடமாநில மக்களை ராமர் கோவிலை காட்டி பாஜக திசை திருப்புகிறது. ஆனால் இந்த முறை வட மாநிலத்திலும் பாஜக தோல்வியை சந்திக்கும்" என்றார்.
முன்னதாக, "தமிழ்நாட்டில் நீட் தேர்வு அனுமதித்து எடப்பாடி தான்" என குற்றம் சாட்டினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“