mk-stalin | dmk | “40 தொகுதிகளில் வென்றால் நாம் கைகாட்டுபவரே பிரதமர்” என மு.க. ஸ்டாலின் சென்னையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக மாவட்ட செயலளர்கள் கூட்டம் சென்னையில் இன்று (நவ.26) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “யார் வெற்றிப் பெறுவாராரோ அவர்தான் வேட்பாளராக இருப்பார்; இவர்தான் இந்தத் தொகுதிக்கு வேட்பாளர் என்று யாரும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கி, விடியல் பயணம் வரை மகளிருக்கு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். செல்லும் இடங்களில் மகளிரின் உண்மையான அன்பைக் காண்கிறேன்.
இனி எக்காலத்திலும் மகளிரின் வாக்குகள் நமக்குதான் என்பதில் எள் முனையளவும் சந்தேகம் இல்லை” எனக் கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “"வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நாம் கைகாட்டுபவரே பிரதமராக வேண்டும்" என பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக காங்கிரஸ் கூட்டணி இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இம்முறை 10-15 தொகுதிகள் வரை கேட்கும் எனவும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“