Advertisment

அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களே இ.பி.எஸ்-உடன் பேசுவதில்லை: மதுரையில் ஸ்டாலின் பேச்சு

வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்று பாராமல் அனைவருக்காகவும் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம்.

author-image
WebDesk
New Update
MK Stalin says AIADMK MLAs do not talk to EPS

திருமண விழாவில் மு.க. ஸ்டாலின்,

மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகம் விரைவில் திறக்கப்பட்ட உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisment

அமைச்சர் மூர்த்தி இல்ல மண விழாவில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “திருமண விழா என்று விளம்பரப்படுத்தாமல் மண்டல மாநாடு என கூறியிருக்கலாம்.

மகனின் திருமணம் மூலம் கட்சி வளர்ச்சி, எழுச்சி பெற வேண்டும் என இவ்வாறு ஏற்பாடு செய்துள்ளார். திருமண விழாவிற்கு குறிப்பு எடுத்து செல்வது இல்லை, அமைச்சர் மூர்த்தியை பற்றி பேச வேண்டி இருப்பதால் இந்த விழாவிற்கு குறிப்புடன் வந்துள்ளேன்.



மூர்த்தி பெரிதா ? கீர்த்தி பெரிதா எனக் கேட்டால் கீர்த்தி பற்றி தெரியல மூர்த்தி தான் பெரியது. மக்கள் நம்பி அளித்த நம்பிக்கைக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறோம்; எங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் பயன்பெறும் வகையில் எங்கள் பணி இருக்கும் என கூறியதுபோல நிறைவேற்றி வருகிறோம்” திமுக எம்எல்ஏக்கள் எடப்பாடியுடன் பேசுவதாக கூறுகிறார்.

அதிமுக எம்.எல்.ஏக்களே அவருடன் பேசுவதில்லை. அவர்களுடைய கட்சியே பிளவுபட்டு போய் இருக்கிறது, எடப்பாடியின் பதவியும் டெம்ப்ரவரி (தற்காலிகம்) தான், கருணாநிதி பெயரிலான நூலகத்தின் கட்டுமான பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்று பாராமல் அனைவருக்காகவும் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். திமுக அரசு மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். “பொய் பிரச்சாரத்தை பற்றி கவலை வேண்டாம், அதனை பற்றி பேச நேரமில்லை.

மக்கள் பணியில் மட்டுமே கவனம் செலுத்துவோம்” எனப் பேசினார். மதுரையில் நடைபெற்ற அமைச்சர் பி.மூர்த்தி மகன் பி.எம்.தியானேஷ் - எஸ்.ஸ்மிர்தவர்ஷினி ஆகியோரது திருமணத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையேற்று நடத்திவைத்து மணமக்களை வாழ்த்தினார்.

இந்த நிகழ்வில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் PTR. பழனிவேல்

தியாகராஜனும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment