உலகினை உழைப்பால் செலுத்தும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு… ஸ்டாலின் – தலைவர்கள் மே தின வாழ்த்து

உலகினை உழைப்பால் செலுத்தும், உலகினுக்குத் தங்கள் வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைப்பாளர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், பல அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

உலகினை உழைப்பால் செலுத்தும், உலகினுக்குத் தங்கள் வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைப்பாளர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், பல அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
laborday wishes

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் பங்களிப்புகள் மற்றும் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் மே 1-ந்தேதியன்று சர்வதேச தொழிலாளர்கள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மே 1 உழைப்பாளர் தினமான இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள மே தின பூங்கா நினைவு சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

மே தின பூங்காவில் உள்ள தூணுக்கு மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். செஞ்சட்டை அணிந்து வந்து மே தின பூங்கா நினைவு சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வணக்கம் செலுத்தினார். அவரைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொ.மு.க. நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டான் உழைப்பாளர் தின வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

உலகினை உழைப்பால் செலுத்தும், உலகினுக்குத் தங்கள் வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு எனது உழைப்பாளர் நாள் வாழ்த்துகள். உழைப்பாளர்களுக்காக மே நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை, சென்னையில் மே நாள் பூங்கா, தொழிலாளர் நல வாரியம் என எண்ணற்ற பங்களிப்புகளை திமுக ஆட்சிதோறும் அண்ணா, கலைஞர் செய்துவந்தனர். அப்பெருந்தலைவர்களின் வழி நடக்கும், நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஏராளமான, இந்தியாவுக்கே வழிகாட்டும் பல தொழிலாளர் நலடத்திட்டங்களைச் செய்து வருகிறது. உழைப்பாளர்களின் நலன் காக்கும் நமது முயற்சிகள் தொடரும், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்! அதற்கு இந்த மே நாள் மேலும் நமக்கு ஊக்கத்தினை வழங்கட்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

மே 1 - உழைக்கும் மக்கள் தம் உரிமைகளை வென்றெடுத்த பொன்னாள்! உலக உழைப்பாளர் தினமான இன்று உழைப்பால் உலகை இயக்கும் அத்தனை தோழர்களுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அன்றைக்கு உழைப்பாளிகள் சிந்திய ரத்தத்தின் பலன் இன்றைக்கு உழைப்பாளர்களுக்கு கிடைத்துள்ள உரிமைகள். உழைப்பாளர் தினத்தில் ஊதியத்துடன் விடுமுறை - மே தின பூங்கா - தொழிலாளர் நல வாரியம் என முத்தமிழறிஞர் கலைஞர் செய்த சாதனைகள் ஏராளம். கலைஞர் வழியில் முதலமைச்சர் ஸ்டாலினின் திராவிட மாடல் அரசும் தொழிலாளர் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உழைப்பாளர் ஒற்றுமை ஓங்கட்டும்! உழைக்கும் மக்களின் உரிமைகளை என்றென்றும் பாதுகாப்போம்! என கூறி உள்ளார். 

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: உழைப்பும் அர்ப்பணிப்புமே நம் நாட்டைக் கட்டமைக்கிறது. உழைப்பே உயர்வு தரும்; மனநிறைவு தரும்; ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு, தளர்வறியா உழைப்பின் மூலம் நம் நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் ‘மே’ தின நல்வாழ்த்துகள்.

த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், "ஓய்வறியா உழைப்பினை முதலீடாக்கி, உதிரத்தை உரமாக்கி உறுதியை, ஒற்றுமையைப் படிக்கற்களாக்கி எங்கள் வலிமை என எடுத்துக்காட்டி எடுத்த பணியை முடித்துக் காட்டி உலகிற்கு அச்சாணியாகத் திகழும் தொழிலாளர்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் நிற்போம்! உழைப்பாளர் உரிமை காப்போம்! இந்த மே தினத்தில் உழைப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!" என்று பதிவிட்டுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ: போராடினார்கள். தியாகம் செய்து பெற்ற உரிமையைப் பேணிப் பாதுகாக்கவும், தொழிலாளர் வர்க்கம் ஓரணியில் நின்று போராடவும் மே நாளில் உறுதியை மேற்கொள்வோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம்: தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி நேரமாக வரையறை செய்யப்பட்ட அடிப்படையில், அவர்கள் 8 மணி நேரம் வேலை செய்திருந்தாலும், உற்பத்தி உலக அளவில் பெருகியுள்ளது. உற்பத்தி பெருக்கத்திற்கு தொழிலாளர்களும், அவர்களது நவீன கண்டுபிடிப்புகளும் பேருதவி செய்துள்ளன. ஆனால் முதலாளித்துவம், தொழிலாளர்களை மென் மேலும் சுரண்டுகிற வகையில், சட்டங்களை திருத்தி, உரிமைகளைப் பறிக்க முயற்சிக்கிறது, இந்த அநீதிகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் : பெரும்பான்மை மத பாசிசத்தை முறியடித்து, ஜனநாயகத்தை பாதுகாக்க மே தின நாளில் உறுதி ஏற்போம்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: பண மதிப்பிழப்பு, பொறுத்தமற்ற சரக்கு மற்றும் சேவை வரி, பணவீக்கம் போன்ற காரணங்களால் தொழில் வளர்ச்சி இல்லாத நிலையில், பொருளாதார பேரழிவு காரணமாக தொழிலாளர்கள் வாழ்வில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறார்கள். அவர்கள் தங்களது உரிமைகளை பாதுகாக்கின்ற வகையில், குரல் எழுப்பும் நாளாக மே 1ம் தேதி அமைய வேண்டும்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்: அமைப்புசாரா தொழிலாளர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைத்து தரப்பு மக்களுக்கும் நியாயமாக வழங்கப்பட வேண்டிய உரிமைகளும், அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். அதை உறுதி செய்வதற்காக போராடுவதற்கு இந்நாளில் பாட்டாளிகள் அனைவரும் உறுதியேற்போம். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், "ஓய்வறியா உழைப்பினை முதலீடாக்கி, உதிரத்தை உரமாக்கி உறுதியை, ஒற்றுமையைப் படிக்கற்களாக்கி எங்கள் வலிமை என எடுத்துக்காட்டி எடுத்த பணியை முடித்துக் காட்டி உலகிற்கு அச்சாணியாகத் திகழும் தொழிலாளர்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் நிற்போம்! உழைப்பாளர் உரிமை காப்போம்! இந்த மே தினத்தில் உழைப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!" என்று பதிவிட்டுள்ளார்.

மநீம தலைவர் கமல்ஹாசன்: "உழைத்து உயர்வதில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த மே தின வாழ்த்துகள். வாழ்க்கைக்கு அழகு சேர்ப்பது சொல் அல்ல. செயல் என்பதை உணர்ந்து உழைத்து வரும் அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment
labor day leaders greetings

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: