Advertisment

மு.க.ஸ்டாலினிடம் உறுதிமொழி வழங்கிய ஆளுனர்: திமுக இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைப்பு

MK Stalin says Central Government assured never imposed Hindi: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரை சந்தித்த பிறகு மத்திய அரசு இந்தியை திணிக்காது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உறுதி அளித்துள்ளதால் திமுக அறிவித்திருந்த இந்தி திணிப்புக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Governor promise Stalin no hindi imposition

Governor promise Stalin no hindi imposition

MK Stalin says Central Government assured never imposed Hindi: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரை சந்தித்த பிறகு மத்திய அரசு இந்தியை திணிக்காது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உறுதி அளித்ததைத் தொடர்ந்து திமுக அறிவித்திருந்த இந்தி திணிப்புக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்தார். சந்திப்புக்குப் பிறகு  செய்தியாளர்களிடம் பேசிய அவர் “இன்று காலை தமிழக ஆளுநர் என்னை சந்திக்க விரும்புவதாக எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று இன்று மாலை நான் தலைமைக் கழத்தின் முதன்மை செயலாளர் துரைமுருகன், திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலுவும் சென்று ஆளுநரை சந்தித்தோம். அவர் வருகிற 20 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நடைபெற இருக்க கூடிய கண்டன ஆர்ப்பாட்டத்தைப் பற்றி அவர் பேசினார். என்ன காரணத்திற்காக நடைபெறுகிறது என்பதை நாங்கள் விளக்கிக் கூறினோம். அதைத் தொடர்ந்து அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. எந்த காரணத்தைக்கொண்டும் தமிழகத்தில் இந்தி திணிக்கப்படமாட்டாது என்று அவர் அழுத்தம் திருத்தமாக எடுத்துக் கூறினார். இதை மத்திய அரசு சொல்ல முன்வருமா என்று நாங்கள் கேட்டபோது, அவர் நான் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கக் கூடியவர். எனவே நிச்சயமாக மத்திய அரசு கூறித்தான் நான் உங்களிடம் கூறுகிறேன். இதனிடையே உள்துறை அமைச்சர் அமித்ஷா ஊடகங்கள் மூலம் வெளியிட்ட செய்தியில், இந்தியாவின் ஒரே மொழியாக இந்திதான் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. நான் கூறியது தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை தெளிவாக கூறியுள்ளார். அவர் கூறியதை மனதில் கொண்டு வரும் 20 ஆம் தேதி திமுக சார்பில் நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்திருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் சொல்கிறேன் எந்த நிலையிலும் இந்தி திணிக்கப்பட்டால் நிச்சயமாக திமுக கருணாநிதி வழியில் நின்று என்றும் எதிர்ப்போம். ஏற்கெனவே தபால் நிலையம், ரயில் நிலைய ஊழியர்கள் தேர்வில் போராட்டம் நடத்தியிருக்கிறோம். அதைத் தொடர்ந்து அவர்களால் உடனடியாக திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆகையால், நாங்கள் இப்போது அறிவித்த போராட்டத்தை இந்த பிரச்னை மையமாக்கப்பட்டு விளக்கம் அளித்திருப்பது திமுகவுக்கு கிடைத்திருக்கக் கூடிய மாபெரும் வெற்றியாக நாங்கள் கருதுகிறோம்.” என்று கூறினார்.

Tamilnadu Bjp Mk Stalin Dmk Banwarilal Purohit
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment