அமைச்சர் பொன்முடி எழுதிய ‘திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்’ என்ற நூலை வெளியிட்டுப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திராவிடம் என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது என்று சாடினார்.
அமைச்சர் பொன்முடி எழுதிய ‘திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நூலை வெளியிட்டுப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திராவிடம் என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது என்று கூறினார். மேலும், 'திராவிடநல் திருநாடும்' என்று சொன்னால் சிலரின் நாக்கு தீட்டாகி விடுமா? என்று கேள்வி எழுப்பிய மு.க. ஸ்டாலின், தமிழ்த்தாய் வாழ்த்தில் 'திராவிடநல் திருநாடும்' என்பதை விட்டுவிட்டு சிலர் பாடுகின்றனர் என்றும் திராவிடம் என்று பாடினால் சிலருக்கு எரியுமென்றால் மீண்டும் மீண்டும் பாடுவோம் என்றும் கூறினார்.
அமைச்சர் பொன்முடி எழுதிய "திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்" என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அப்போது நூலை வெளியிட்டுப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “கலைஞரால் பட்டை தீட்டப்பட்டவர் பொன்முடி. அதனால்தான் தனது செயல்பாடுகளால் மின்னுகிறார். ஆழ்கடலில் கண்டெடுத்த நன்முத்து பென்முடி.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய மு.க. ஸ்டாலின், “திராவிடம் என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. ஆரியம் அஞ்சி நடுங்குகிறது. திராவிட மாடல் ஆட்சி என்பது சமூக நீதி, சமத்துவ ஆட்சி; மற்ற மாநிலங்களை விட தமிழகம் முன்னோக்கி செல்ல திராவிட இயக்கம்தான் காரணம்.” என்று கூறினார்.
மேலும், “'திராவிடநல் திருநாடும்' என்ற சொன்னால் சிலரின் நாக்கு தீட்டாகி விடுமா? தமிழ்த்தாய் வாழ்த்தில் 'திராவிடநல் திருநாடும்' என்பதை விட்டுவிட்டு சிலர் பாடுகின்றனர். திராவிடம் என்று பாடினால் சிலருக்கு எரியுமென்றால் மீண்டும் மீண்டும் பாடுவோம். திராவிடம் என்பது ஒருகாலத்தில் இடம், மொழி, இனத்தின் பெயராக இருந்தது.” என்று மு.க. ஸ்டாலின் சுட்டிக் காட்டினார்.
“அடிமை சிந்தனைகளை ஆட்சி, அதிகாரம், சட்டங்கள் மூலமாக உடைத்துள்ளோம். அடிமைகளை விட மோசமாக நடத்தப்பட்ட மக்களின் உரிமைகளைமீட்க திராவிடம் தோன்றியது. அநீதிகளுக்கு எதிராக கேள்வியெழுப்பி, போராட்டங்கள் நடத்தி வெற்றி பெற்றது திராவிட இயக்கம். ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலுக்காக தொடங்கப்பட்டது தான் திராவிட இயக்கம்.” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“