உயர்பதவிகளில் நேரடி நியமனம் பணியிடங்களை நிரப்புவதர்கான யு.பி.எஸ்.சி-யின் விளம்பரத்திற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 45 பதவிகளுக்கான நேரடி நியமன ஆட்சேர்ப்பு விளம்பரத்தை ரத்து செய்ய யு.பி.எஸ்.சி-க்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இதன் மூலம், உயர்பதவிகளில் நேரடி நியமனம் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, யு.பி.எஸ்.சி தலைவி ப்ரீத்தி சுதனுக்கு, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுதிய கடிதத்தில், “அரசுப் பணிகளில் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த தகுதியானவர்கள் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற, சமூக நீதிக்கான அரசியலமைப்பு ஆணையை நிலைநிறுத்துவது முக்கியம். இந்தப் பணியிடங்கள் சிறப்புப் பணிகளாகக் கருதப்பட்டு, ஒற்றைப் பணியாளர் பதவிகளாக நியமிக்கப்பட்டுள்ளதால், இந்த நியமனங்களில் இடஒதுக்கீட்டிற்கு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை” என்று ஜிதேந்திர சிங் கடிதத்தில் கூறியுள்ளார்.
மேலும், “சமூக நீதியை உறுதி செய்வதில் பிரதமர் கவனம் செலுத்தும் சூழலில் இந்த அம்சம் மறுபரிசீலனை செய்யப்பட்டு சீர்திருத்தப்பட வேண்டும்” என்று ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். மேலும், “17.8.2024 அன்று வெளியிடப்பட்ட லேட்டரல் என்ட்ரி ஆட்சேர்ப்புக்கான விளம்பரத்தை ரத்து செய்யுமாறு யு.பி.எஸ்.சி.,யை நான் வலியுறுத்துகிறேன். இந்த நடவடிக்கையானது சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும்” என்று ஜிதேந்திர சிங் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
உயர்பதவிகளில் நேரடி நியமன முறையில் பணியிடங்களை நிரப்புவதற்கான யு.பி.எஸ்.சி-யின் விளம்பரத்திற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் பா.ஜ.க.,வின் முக்கிய கூட்டணி கட்சிகளான ஜே.டி.யு மற்றும் லோக் ஜன சக்தி ஆகிய கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
காங்கிரஸ், தி.மு.க ஆகிய எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்ஹில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசை விமர்சித்தன. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இது "தலித்துகள், ஓ.பி.சி.,க்கள் மற்றும் பழங்குடிகள் மீதான தாக்குதல்" என்று கூறினார்.
உயர்பதவிகளில் நேரடி நியமனம் பணியிடங்களை நிரப்புவதர்கான யு.பி.எஸ்.சி-யின் விளம்பரத்திற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 45 பதவிகளுக்கான நேரடி நியமன ஆட்சேர்ப்பு விளம்பரத்தை ரத்து செய்ய யு.பி.எஸ்.சி-க்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இதன் மூலம், உயர்பதவிகளில் நேரடி நியமனம் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
உயர்பதவிகளில் நேரடி நியமனம் முறை ரத்து செய்யப்பட்டிருப்பது, சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி என்று தி.மு.க தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
💪🏾Victory for #SocialJustice! The Union Govt has withdrawn the lateral entry recruitment after strong opposition from our #INDIA bloc.
— M.K.Stalin (@mkstalin) August 20, 2024
💂♀ But we must remain vigilant, as the Union BJP Govt will try to undermine reservation through various forms.
✊🏾 The arbitrary 50% ceiling…
இது குறித்து முதலமைசர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: “ஒன்றிய அரசின் உயர் பதவிகளில் நேரடி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி.
இந்தியா கூட்டணியின் கடும் எதிர்ப்புக்குப் பணிந்து நேரடி நியமனங்கள் தொடர்பான அறிவிப்பை ஒன்றிய அரசு திரும்பப்பெற்றுள்ளது. பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் உரிமைகளைப் பாதுகாக்க நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்” என தெரிவித்துள்ளார்.
2019 இல் லேட்டரல் எண்ட்ரி முறையில் பணி நியமனம் செய்யப்பட்ட 57 பேருக்குப் பதவி நீட்டிப்பு கொடுக்கக்கூடாது!
— Dr D.Ravikumar (@WriterRavikumar) August 20, 2024
ஒன்றிய பாஜக அரசு இணை செயலாளர், இயக்குநர், துணை செயலாளர் பதவிகளில் லேட்டரல் எண்ட்ரி முறையில் பணி நியமனம் செய்வதற்கு வெளியிட்ட அறிவிப்பை எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல்…
அதே போல, வி.சி.க எம்.பி ரவிக்குமார் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “2019 இல் லேட்டரல் எண்ட்ரி முறையில் பணி நியமனம் செய்யப்பட்ட 57 பேருக்குப் பதவி நீட்டிப்பு கொடுக்கக்கூடாது!
ஒன்றிய பாஜக அரசு இணை செயலாளர், இயக்குநர், துணை செயலாளர் பதவிகளில் லேட்டரல் எண்ட்ரி முறையில் பணி நியமனம் செய்வதற்கு வெளியிட்ட அறிவிப்பை எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் எதிர்ப்பால் ரத்து செய்திருக்கிறது. இது எதிர்க்கட்சிகளுக்குக் கிடைத்த வெற்றி!
இட ஒதுக்கீட்டு முறைக்குள் வராமல் ஏமாற்றுவதற்கு ஒவ்வொரு பதவியையும் தனி கேடராக ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ளது. இத்தகைய மோசடிகள் வேறு எப்போதெல்லாம் நடந்திருக்கிறது எனப் பார்த்து அவற்றை ரத்துசெய்ய எதிர்க் கட்சிகள் வலியுறுத்த வேண்டும்!
2019 ஆம் ஆண்டில் இதே போல 57 உயர் பதவிகளை லேட்டரல் எண்ட்ரி மூலம் இட ஒதுக்கீட்டு முறை இல்லாமல் உயர்சாதியினரைக் கொண்டு பாஜக அரசு நிரப்பியுள்ளது. அவர்களின் நியமனத்தை ரத்து செய்து முறைப்படி அந்தப் பதவிகளை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்ப வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.