2 வது நாளாக முதமைச்சர் ஸ்டாலின் வெள்ளம் சூழந்த பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார்.
சென்னை வரலாற்றில் 6வது முறையாக இந்தாண்டில் 2,000 மி.மீ மழை பெய்துள்ளது.1976, 1985, 1996, 2005, 2015 மற்றும் தற்போது பெரும் மழை பதிவாகி உள்ளது. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் நிரம்பி உள்ளது. நேற்று மாலையில் சென்னையின் முக்கிய இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. தண்ணீர் வடியாத இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை. பல்வேறு இடங்களில் தண்ணீர் முழுவதுமாக அகற்றப்படவில்லை. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். நிவாரண முகாமிற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்நிலையில் இன்றும் முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளம் பாதித்த இடங்களை ஆய்வு செய்து வருகிறார். தரமணி, துரைப்பாக்கம் பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். தரமணியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஆய்வு செய்த பிறகு, அரிசி, பால், பிரெட், பாய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்கினார். மேலும் சென்னை நேபியர் பாலம் அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலர் ஷிவதாஸ் மீனா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“