திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தன் பிறந்தநாளை முன்னிட்டு, தலைவர் கருணாநிதியிடம் குடும்பத்தினருடன் சென்று ஆசி பெற்றார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) தன் 65வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாடுகின்றனர்.
இந்நிலையில், தன் பிறந்தநாளை முன்னிட்டு, மு.க.ஸ்டாலின் திமுக தலைவர் கருணாநிதியிடம் குடும்பத்தினருடன் ஆசி பெற்றார். அப்போது, அவருடைய மனைவி வசந்தி ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது கருணாநிதியிடம் ஸ்டாலின் தன் மகனை காண்பித்து, “யாரென்று தெரிகிறதா? உதயா”, என கூறினார். அப்போது கருணாநிதி வாஞ்சையாக சிரித்தார்.
திமுக தலைவர் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்ற ஸ்டாலின் https://t.co/J2lE5854jQ #karunanidhi #MKStalin #MKStalinBirthday #HBDMKStalin #HBDStalin
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) 1 March 2018
மேலும், தன்னை பற்றி மனைவி வசந்தி எழுதியிருக்கும் ‘நானும் அவரும்’ புத்தகத்தை ஸ்டாலின் கருணாநிதிக்கு வழங்கினார்.
ஏற்கனவே, கருணாநிதி தன் கொள்ளுப்பேரனிடம் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.