scorecardresearch

ஸ்டாலின் சிங்கப்பூர் பயணம்: உடன் சென்றது யார், யார்?

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சிங்கப்பூர் சென்றடைந்தார். அவருடன், தொழில் துறை அமைச்சர் மற்றும் அரசுத் துறை உயர் அதிகாரிகள் சென்றுள்ளனர்.

MK Stalin Singapore tour, Durga Stalin, MK Stalin in Singapore, ஸ்டாலின் சிங்கப்பூர் பயணம், ஸ்டாலின் உடன் சென்றது யார், யார், MK Stalin Singapore tour who is who travel with him
சிங்கப்பூரில் மு.க. ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சிங்கப்பூர் சென்றடைந்தார். அவருடன், தொழில் துறை அமைச்சர் மற்றும் அரசுத் துறை உயர் அதிகாரிகள் சென்றுள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க, சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு 9 நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கவும் வரும் 2024 ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கவும் அரசு முறை பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 23) புறப்பட்டுச் சென்றார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு பிற்பகல் சிங்கப்பூர் சென்றடைந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின், தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் சென்றுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Mk stalin singapore tour who is who travel with him

Best of Express