சுக்கிரபுத்திரி யாகம் நடத்தினால் முதல்வர் ஆக முடியுமா? ராமதாஸ் கேள்வி

மு.க.ஸ்டாலின் ஸ்ரீரங்கம் பயணம் குறித்து, ‘சுக்கிரபுத்திரி யாகம் நடத்தினால் முதல்வர் ஆக முடியுமா? கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடுமா? என ராமதாஸ் சரமாரி கேள்வி!

மு.க.ஸ்டாலின் ஸ்ரீரங்கம் பயணம் குறித்து, ‘சுக்கிரபுத்திரி யாகம் நடத்தினால் முதல்வர் ஆக முடியுமா? கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடுமா? என ராமதாஸ் சரமாரி கேள்வி!

மு.க.ஸ்டாலின் நேற்று(ஜூன் 22) ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலுக்கு சென்றதும், கோவில் வாசலில் பட்டர்களிடம் பூரண கும்ப மரியாதை பெற்றது, யானை மூலமாக மாலை அணிவிப்பு, யானைக்கு கரும்பு, வெல்லம் கொடுத்தது, நெற்றியில் வைத்த சந்தனத்தை அழித்தது, கோவில் பிரகாரத்தில் சுற்றி வந்தது என அத்தனையும் சர்ச்சை ஆகியிருக்கிறது.

மு.க.ஸ்டாலின் ஸ்ரீரங்கம் பயணம் குறித்து சூசகமாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று அடுத்தடுத்து ட்வீட்களை தட்டி விட்டார். ராமதாஸ் வெளியிட்ட ஒரு ட்வீட்டில், ‘கண்ணாடியை திருப்பி வைத்தால் ஆட்டோ ஸ்டார்ட் ஆகும் என்ற அஜித் பட நகைச்சுவைக்கு அடுத்தப்படியாக, ஆகச் சிறந்த மூட நம்பிக்கை என்பது சுக்கிரபுத்திரி யாகம் நடத்தினால் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்பது தான்!’ என கூறியிருக்கிறார்.

டாக்டர் ராமதாஸ் மற்றொரு ட்வீட்டில், ‘நெற்றியில் வைத்த மஞ்சள் பொட்டை அழித்து விட்டால், கோயிலுக்குள் நடத்திய சுக்கிரபுத்திரி யாகத்துக்கு பலன் கிடைக்குமா… கிடைக்காதா? பகுத்தறிவுவாதிகள் பதில் சொன்னால் பரவாயில்லை!’ என கேட்டிருக்கிறார்.

ஸ்டாலின் சார்பில் சுக்கிரபுத்திரி யாகம் நடத்தியதாக பெயரை குறிப்பிடாமல் ராமதாஸ் உணர்த்தியிருப்பதாக கருதப்படுகிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close