Tamil Nadu government signs MoUs with Japanese firms
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் சுற்றுப்பயணத்தின் போது, தமிழக அரசு ஜப்பானிய நிறுவனங்களுடன் 800 கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoUs) திங்கள்கிழமை கையெழுத்திட்டது.
Advertisment
சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அவர் மேற்கொண்ட பயணங்களின் போது, தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்வதற்கு பத்துக்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருக்கும் மாநில அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாகவும், 2024 ஜனவரியில் சென்னையில் நடைபெறும் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முக்கிய நிறுவனங்களை அழைக்கவும் ஆசிய நாடுகளுக்குச் சென்ற ஸ்டாலின் அங்கு அதிக முதலீடுகளை ஈர்க்க முயன்றார்.
தெற்காசியாவில் முதலீடுகளுக்கு மிகவும் கவர்ச்சிகரமான மாநிலமாக தமிழகத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம், என்று திங்களன்று டோக்கியோவில் முதலீட்டாளர்களுடனான நிகழ்வின் போது முதலமைச்சர் கூறினார்.
Advertisment
Advertisements
ஸ்டாலின் முன்னிலையில், வாகன உதிரிபாகங்கள், விண்வெளி, பாதுகாப்பு மற்றும் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் உலோகங்கள், கட்டுமானப் பொறியியல் ஆகிய துறைகளில் ₹818.90 கோடி முதலீடு செய்ய ஜப்பானைச் சேர்ந்த நிறுவனங்களுடன், 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையெழுத்தானது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் டிரக் உதிரிபாகங்களைத் தயாரிக்க (KyoKuto Satra’s) கியோகுடோ சத்ராவின் ₹113 கோடிக்கும் மேலான உறுதிமொழியும், கட்டுமானத் தொழிலில் பயன்படுத்த எலக்ட்ரானிக் பாகங்களுக்கான எக்ஸ்ட்ரூஷன் லைன்களைத் தயாரிக்க ₹200 கோடி முதலீடு செய்ய கோஹியே (Kohyei) உறுதியளித்ததும் இந்த ஒப்பந்தங்களில் அடங்கும்.
மே 26 அன்று, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆட்டோமொபைல் ஏர்பேக் இன்ஃப்ளேட்டர் ஆலையை விரிவுபடுத்துவதற்காக டெய்சல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
வெளிநாட்டில் ஸ்டாலினின் அனைத்து முயற்சிகளும் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 14.6% லிருந்து 18% ஆக அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன, இதன் மூலம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய முடியும் என்று ஒரு அரசாங்க அதிகாரி கூறினார். கடந்த ஆண்டு, ஸ்டாலினின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தின் விளைவாக ₹6,100 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
ஸ்டாலின் மே 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சிங்கப்பூருடன் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பிறகு ஒசாகா மற்றும் டோக்கியோவில் இருக்கிறார். முதல்வர் மே 23 அன்று சிங்கப்பூர் சென்றார், மேலும் அவர் மே 31 அன்று திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Addressed the august gathering at the Investment Conclave in Tokyo, hosted with the assistance of JETRO. I explained how Tamil Nadu has been at the forefront in attracting Japanese companies and showcased the state’s potential for industrial growth.
இரு நாடுகளிலும், ஸ்டாலின், முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்தித்தார். பல முன்னணி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன, அடுத்த ஆண்டு உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பில் முடிவுகள் தெளிவாகத் தெரியும் என்று மற்றொரு அதிகாரி கூறினார்.
ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் (JETRO) உதவியுடன் மாநில அரசு ஒசாகா மற்றும் டோக்கியோவில் முதலீட்டாளர்களை சந்தித்து வருகிறது. திங்களன்று, JETROவின் தலைவர் இஷிகுரோ நோரிஹிகோவை ஸ்டாலின் சந்தித்தார்.
தமிழ்நாடு மற்றும் ஜப்பான் இடையே வலுவான பொருளாதார உறவுகளை வளர்ப்பதற்கும், நமது மாநிலத்தில் ஜப்பானிய முதலீடுகளை உறுதி செய்வதற்கும் ஜெட்ரோவின் உதவி மிகவும் முக்கியமானது என்று ஸ்டாலின் கூறினார். இந்தியாவிலேயே ஜப்பான் முதலீடுகளில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது.
நிசான், தோஷிபா, யமஹா மற்றும் ஹிட்டாச்சி போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன.
சிங்கப்பூர் மற்றும் டோக்கியோவில் புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஸ்டாலின், வேர்களைத் தேடி எனும் இளைஞர் பரிமாற்றத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
நாட்டின் தந்தை என்று கருதப்படும் சிங்கப்பூரின் மறைந்த முதல் பிரதமர் லீ குவான் யூவுக்கு தமிழகத்தின் மன்னார்குடியில் சிலை அமைக்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஸ்டாலின் இரு நாட்டுப் பயணமாக புறப்பட்டபோது, அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அவரது பயணம் வீண் என்று கூறியிருந்தார். மறைந்த ஜெயலலிதாவும், தானும் கொண்டு வந்த முதலீடுகள், பெரிய தொழில்கள் தமிழகத்திற்குள் வருவதற்கு காரணமாக அமைந்தது. ஆனால், திமுக அதன் பெருமையை எடுத்துக் கொள்கிறது என்றார் பழனிசாமி.
இதற்கு மறுப்பு தெரிவித்து, முன்னதாக தொழில் துறை அமைச்சராக இருந்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ஸ்டாலினை தாக்கி அதிமுக கேபினட் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை மறைக்க பழனிசாமி முயற்சிக்கிறாரா என்று கேட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil