MK Stalin Press Meet: பொதுமக்கள் மனுக்களுக்கு ரசீது; ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்வு- மு.க.ஸ்டாலின்

MK Stalin Tamil News: கருணாநிதி இல்லம் முன்பு மொத்த மீடியாவுக்கும் அழைப்பு விடுத்து, அவர் சந்திப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

By: Jan 25, 2021, 12:47:23 PM

MK Stalin Press Meet At M karunanidhi Gopalapuram Residence: மு.க.ஸ்டாலின் பிரஸ்மீட் திங்கட்கிழமை (ஜனவரி 25) என அறிவிக்கப்பட்டது முதல், அது தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்தபடியே இருந்தது. ஏதோ ஒரு ஹாலில் நடைபெறும் என பலரும் நினைத்திருக்க, கலைஞர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தின் முன்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது, முக்கியமான ஒரு அடையாள அரசியல்!

ஐ பேக் டீமின் கண்காணிப்பில் கோபாலபுரம் இல்லம் முன்பு ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் எக்ஸிகியூட்டிவ் மீட்டிங் லுக்கில், இருக்கைகள் ஸ்மார்ட்டாக வரிசைப்படுத்தப்பட்டன. இந்த இருக்கைகளையே படம் பிடித்து சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆக்கினார்கள் உடன்பிறப்புகள். தமிழகத்தின் தலையெடுத்தை மாற்றும் முக்கிய அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட இருப்பதாகவும் கேப்ஷன் கொடுத்தனர்.

ஸ்டாலின் பிரஸ்மீட் தொடர்பான தகவல்களின் தொகுப்பை இங்கு காணலாம். இந்தச் செய்தியுடன் இணைந்திருங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

 

 

 

Live Blog
MK Stalin Press Meet: ஸ்டாலின் பிரஸ்மீட் தொடர்பான தகவல்களின் தொகுப்பை இங்கு காணலாம். இந்தச் செய்தியுடன் இணைந்திருங்கள்.
12:45 (IST)25 Jan 2021
கேள்விகளை தவிர்த்த ஸ்டாலின்

ரொம்பவே ஸ்பெஷலாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பிரஸ்மீட்டில் நிருபர்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் ஸ்டாலின் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ‘இப்போதே அரசு நிதி நெருக்கடியில் இருக்கிறது. நீங்கள் ஆட்சிக்கு வந்தால் திட்டங்களை நிறைவேற்ற என்ன செய்வீர்கள்?’ என ஒரு நிருபர் கேட்டபோது, ‘எனது பயணத் திட்டம் பற்றி மட்டும் கேளுங்கள்’ என்றார் ஸ்டாலின்.

மேலும் அரசியல் ரீதியான கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பேட்டியை முடித்தார். 

11:32 (IST)25 Jan 2021
பொதுமக்கள் மனுக்களுக்கு ரசீது; ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்வு- மு.க.ஸ்டாலின்

‘ஜன.29 முதல் புதிய கோணத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன்;  மக்கள் பிரச்னைகள் தொடர்பான மனுக்களை நானே சேகரித்து, சீல் வைத்து மக்களுக்கு ரசீது வழங்குவேன்! திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் போர்க்கால அடிப்படையில் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். ’ என கோபாலபுரம் கருணாநிதி இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற புதிய தேர்தல் பிரசாரத்தை திருவண்ணாமலையில் இருந்து தொடங்குகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

11:25 (IST)25 Jan 2021
100 நாள் செயல் திட்டம்

இந்த பிரஸ்மீட்டில் திமுக.வின் 100 நாள் செயல் திட்டத்தை ஸ்டாலின் அறிவித்தார். பொதுமக்கள் தங்கள் குறைகளை ஸ்டாலின் அணி இணையதளத்தில் பதிவு செய்யலாம். ஆட்சிக்கு வந்ததும் அவை நிறைவேற்றப்படும் என ஸ்டாலின் கூறினார்.

11:12 (IST)25 Jan 2021
கலைஞர் இல்லம் ஏன்?

அடுத்தகட்ட பிரசாரப் பயணத்திற்கு, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என பெயரிட்டார் ஸ்டாலின். திருவண்ணாமலையில் இந்தப் பயணம் தொடங்க இருக்கிறது. கருணாநிதியைப் போல சொன்னதைத் செய்வேன் என உணர்த்தவே கலைஞர் இல்லத்தை பிரஸ்மீட்டுக்கு தேர்வு செய்ததாக ஸ்டாலின் கூறினார்.

11:08 (IST)25 Jan 2021
பிரஸ்மீட் நோக்கம்

‘மு.க.ஸ்டாலின் ஆகிய நான் தமிழ்நாட்டு மக்கள் முன்னிலையில் ஒரு உறுதி அளிக்கிறேன். உங்கள் பிரச்னைகளை தீர்ப்பதே எனது முதல் பணி. எனது ஆட்சியின் முதல் 100 நாட்கள் உங்கள் பிரச்னைகளை தீர்க்க முன்னுரிமை அளிக்கப்படும். இதை அறிவிப்பதே இந்த பிரஸ்மீட் நோக்கம்’ என அறிவித்தார்

11:05 (IST)25 Jan 2021
பிரஸ்மீட் தொடங்கியது

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அருகில் நிற்க, மீடியாவை சந்தித்து வருகிறார் மு.க.ஸ்டாலின். விவசாயிகள் படும் துயரம் குறித்து பேசி வருகிறார். கொரோனா காலத்தில் மாநில அரசு உதவி செய்யாதது பற்றியும் குறிப்பிட்டார்.

10:55 (IST)25 Jan 2021
முக்கியக் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் ஸ்டாலின்

தேர்தல் பிரசாரக் கூட்டங்களில், ‘நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்து வருகிறார். தவிர, அண்மையில் திருத்தணி அம்மையார்குப்பம் மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் வேல் ஏந்தியது விவாதங்களை கிளப்பியது.

இவை குறித்தும் இன்றைய பிரஸ்மீட்டில் ஸ்டாலின் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. காலை 11 மணிக்கு பிரஸ்மீட் தொடங்கும்.

Mk Stalin Press Meet Tamil News: மு.க.ஸ்டாலின் தொடர்ந்து, ‘மக்கள் கிராம சபை’ என்ற பெயரில் கூட்டங்களை நடத்தி வருகிறார். இதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருவதாக தி.மு.க.வினர் கூறுகின்றனர். அதன் தொடர்ச்சியாக இந்த பிரஸ்மீட்டை நடத்துகிறார்.

பொதுவாக நிகழ்ச்சிகளுக்கு செல்கிற இடங்களில் மீடியாவை மு.க.ஸ்டாலின் சந்திப்பது உண்டு. கலைஞர் கருணாநிதி இல்லம் முன்பு மொத்த மீடியாவுக்கும் அழைப்பு விடுத்து, அவர் சந்திப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Web Title:Mk stalin tamil news live mk stalin press meet at m karunanidhi gopalapuram residence

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X