வாழ்த்திய அனைவருக்கும் நெகிழ்ச்சிமிகு நன்றிகள்! – ஸ்டாலின் ட்வீட்

நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், வாழ்த்து மடல்கள் – பூங்கொத்துகள் அனுப்பியும், சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் – மு.க.ஸ்டாலின்

வாழ்த்திய அனைவருக்கும் நெகிழ்ச்சிமிகு நன்றிகள்! – ஸ்டாலின் ட்வீட்
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா (புகைப்படம்: ட்விட்டர்/ ஸ்டாலின்)

தனது பிறந்தநாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை 70 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். காலை முதல் பல்வேறு பிரபலங்களும் தி.மு.க தொண்டர்களும் நேரிலும் தொலைப்பேசியிலும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைப்பேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்: ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் தேசியத் தலைவர்கள் உரை: அகில இந்திய அரசியலுக்கு அழைப்பு

புதன்கிழமை மாலை சென்னை நந்தனம் மைதானத்தில் ஸ்டாலினின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்றனர். மேலும், துரைமுருகன், டி.ஆர்.பாலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர்.

இந்தநிலையில், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், வாழ்த்து மடல்கள் – பூங்கொத்துகள் அனுப்பியும், சமூக வலைத்தளங்களிலும் என உள்ளன்போடு எனது 70-ஆவது பிறந்தநாளில் வாழ்த்திய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள், தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நெகிழ்ச்சிமிகு நன்றிகள்!” எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Mk stalin thanks everyone for birthday wishes

Exit mobile version