ஜி20 மாநாட்டை இந்தியா நடத்தவுள்ள நிலையில், அது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது.
இதில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை (டிச.5) டெல்லி செல்கிறார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் மு.க. ஸ்டாலின், அங்கு பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்தித்து பேசவுள்ளார்.
அப்போது தமிழ்நாட்டிற்கு தேவையான பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்துவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
முன்னதாக ஜி20 மாநாடு குறித்த லோகோ, கருப்பொருள் உள்ளிட்டவற்றை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார்.
இந்தியாவின் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள வங்க தேசம், எகிப்து, எகிப்து, மொரிசியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓணம், சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜி20 மாநாடு 2023ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சர்வதேச தலைவர்கள் கலந்துகொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/