மு.க.ஸ்டாலின், மலேசியா பயணம் : கெஜ்ரிவாலுக்கு பதிலடி கொடுத்து பேட்டி

மு.க.ஸ்டாலின், மலேசியா சென்றார். அங்கு உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். முன்னதாக விமான நிலையத்தில் கெஜ்ரிவாலுக்கு பதில் சொன்னார்.

மு.க.ஸ்டாலின், மலேசியா சென்றார். அங்கு உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். முன்னதாக விமான நிலையத்தில் கெஜ்ரிவாலுக்கு பதில் சொன்னார்.

மு.க.ஸ்டாலின் நேற்று (பிப்ரவரி 23) மாலையில் மலேசியாவுக்கு புறப்பட்டார். அங்கு உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் அந்த மாநாட்டில் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்துகொண்டு பேசுகிறார்.

மு.க.ஸ்டாலின் மலேசியா செல்வதற்காக நேற்று மாலை சென்னை விமான நிலையம் வந்தபோது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கமல்ஹாசன் கட்சி தொடக்க விழாவில் கலந்து கொண்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘திமுக.வும் அதிமுக.வும் ஊழல் கட்சிகள்’ என குறிப்பிட்டது குறித்து கருத்து கேட்டனர்.

மு.க.ஸ்டாலின் அதற்கு பதில் அளிக்கையில், ‘லோக்பால் சட்டத்தை பற்றி பேசி ஆட்சிக்கு வந்த கெஜ்ரிவால், அதன்பிறகு அதை பேசாதது ஏன்?’ என கேள்வி எழுப்பினார். ‘தமிழகத்திற்கு பிரதமர் வருகை காவிரி பிரச்சனையில் சாதகமான சூழலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்’ என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

 

×Close
×Close