/indian-express-tamil/media/media_files/2025/09/17/trichy-2025-09-17-16-35-45.jpeg)
Trichy
திருச்சி, செப்.17 – தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் ‘சமூகநீதி நாள்’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
முன்னதாக, திருச்சி விமான நிலையத்துக்கு வந்த முதல்வர், மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள், திமுக மற்றும் கூட்டணிக் கட்சி பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், “தந்தை பெரியாரின் சுயமரியாதை, ஆளுமைத் திறன், பகுத்தறிவுப் பார்வை போன்ற கொள்கைகளை நாம் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் போன்ற கொள்கைகளுக்காக நம்மை அர்ப்பணிக்க வேண்டும்” என்று கூறினார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/17/trichy-2025-09-17-16-35-14.jpeg)
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி மேயர் அன்பழகன், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மா.சுப்பிரமணியன், எஸ்.எஸ்.சிவசங்கர், எம்பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, துரை வைகோ, அருண் நேரு, ராசா, கவிஞர் சல்மா உள்ளிட்ட 2000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
முதல்வர் வருகையை முன்னிட்டு, திருச்சி மாநகரம் முழுவதும் திரளான திமுகவினர் சாலையில் இருபுறமும் நின்று வரவேற்பு அளித்தனர். திருச்சி நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்ட முதல்வர், சாலை மார்க்கமாக கரூர் சென்றடைந்தார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us