பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க தமிழக அரசு உடனே அமைச்சரவையை கூட்டவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்நிலையில், தீர்ப்பு குறித்து வரவேற்பு தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் உடனடியாக அமைச்சரவையை கூட்டி, இவ்விவகாரம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் தனது ட்விட்டரில், "பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்!
27 வருடங்களாக சிறையிலிருக்கும் இவர்களை விடுதலை செய்ய, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அமைச்சரவையைக் கூட்டி உடனடி முடிவெடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்!"
என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ரிலீஸ்: முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் என தீர்ப்பு!