தற்போது ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிக்கை விடுத்துள்ளது இந்தியா முழுவதும் உள்ள மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடக தோல்வியை மறைப்பதற்காக பாஜக எடுத்துள்ள முடிவு இது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, பல அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
புதுக்கோட்டையில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, “ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெரும் முடிவுகளை ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் பட்சத்தில், மாநில அரசுகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.
இதற்குமுன்பு, பிரதமர் மோடி ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்யும்போது திமுக அதை எதிர்த்தது.
இதற்குப்பின்பு வரும் காலங்களிலும் இதுபோன்ற முடிவுகளை எடுக்கும் முன், மாநில அரசுடன் கலந்தாலோசிக்க வேண்டும்”, என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil