அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 8 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
அதன் விவரம் இங்கே
செங்கல்பட்டு மாவட்டத்தில், ரூ. 450 கோடி முதலீட்டில் நோக்கியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 100 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
கோவையில் ரூ.150 கோடி முதலீட்டில் செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க Yield Engineering Systems நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 300 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
சென்னையில் GeakMinds நிறுவனத்தின் ஐடி மற்றும் அனலிட்டிக்ஸ் சேவை மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் முலம் 500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ. 400 கோடி மூதலீட்டில் எலக்ட்ரோலைசர் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க Ohmium நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
The first day in San Francisco has set a promising tone for the days to follow!
— M.K.Stalin (@mkstalin) August 30, 2024
Secured investments exceeding ₹900 crores at Chennai, Coimbatore, Madurai, and Chengalpattu, paving the way for 4,100 new jobs in multiple sectors!
🔹 Nokia - ₹450 crore, 100 jobs
🔹 PayPal -… pic.twitter.com/1q6sH7Qgjb
சென்னை, தரமணியில், செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் உபகரணங்களுக்கான மேம்பட்ட AI-இயக்கப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் அமைக்க Applied Materials நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
மதுரையில் ரூபாய் 50 கோடி முதலீட்டில் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய விநியோக மையம் அமைக்க Infinx நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 700 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
சென்னை செம்மஞ்சேரியில் ரூ.250 கோடி முதலீட்டில் செமி கண்டக்டர் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மையம் அமைக்க Microchip நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 1500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
சென்னையில் Paypal நிறுவனத்தின் AI மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன் மூலம் 1000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
மொத்தமாக சுமார் ரூ.1600 கோடி முதலீட்டில் 5,100 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.