தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் அரசு அதிகாரிகளும் சென்றுள்ளனர்.
முதற்கட்டமாக கடந்த ஆக.29-ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் உலக முதலீட்டாளர்களை சந்தித்தார். இதில் நோக்கியா உள்ளிட்ட 8 நிறுவனங்களுடன் 4600 பேருக்கு வேலையளிக்கும் வகையில் ரூ.1300 கோடிக்கான முதலீட்டுக்கு ஒப்பந்தங்கள் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து, கடந்த ஆக.31-ம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர், சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ புறப்பட்டுச் சென்றார். அங்கு ஸ்டாலினுக்கு, தமிழர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
ஸ்டாலின், சிகாகோவில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கவுள்ளார்.
இந்நிலையில், சிகாகோ நகரில் சைக்கிளில் பயணித்த வீடியோவை ஸ்டாலின் தன் X பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி முதல்வர் சென்னை திரும்புகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“