கோவையில் தங்கநகை தயாரிக்கும் பொற்கொல்லர்களை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறைகளை கேட்டு அறிந்தார்.
கோவை மாவட்டத்தில் இன்றும் நாளையும் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
இதற்காக இன்று காலை கோவை வந்த முதல்வர் அவிநாசி சாலையில் எல்காட் தொழில் பூங்காவை திறந்து வைத்தார். தொடர்ந்து சுகுணா கல்யாண மண்டபத்தில் நில எடுப்பு விளக்கு அளிக்கப்பட்ட ஆணைகளை உரிமையாளர்களுக்கு வழங்கினார். பின்னர் அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்றார்.
தொடர்ந்து இன்று மாலை அரசினர் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் கெம்பட்டி காலனி பகுதியில் தங்க நகை தயாரிக்கும் பொற்கொல்லர்களின் பட்டறைக்கு நேரில் சென்று அவர்களது குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். மேலும், அவர்களின் வாழ்வாதாரம் குறித்து கேட்டறிந்த அவர் பொற்கொள்ளர்கள் விடுத்த கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதனையடுத்து, தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக்கழகத்தின் சார்பில், குறிச்சி தொழிற்பேட்டை வளாகத்தில் 23 கோடி மதிப்பில், 98.812 சதுர அடியில், கட்டப்பட்டுள்ள தொழிலாளர் தங்கும் விடுதியை முதல்வர் மு க ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ வ வேலு, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி, மனிதவள மேம்பாட்டுத்துறை கயல்விழி செல்வராஜ், முதன்மை செயலாளர் முருகானந்தம், சிறு குறு மற்றும் நடு தொழில் நிறுவன செயலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“