விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து 12 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Advertisment
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
விழுப்புரம் மாவட்டத்தில் 8 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 பேரும் என்று மொத்தம் 12 பேர் போலி மதுபானங்களை அருந்தி உயிரிழந்திருக்கிறார்கள்.
இதனால் தற்போது முதலமைச்சர் ஸ்டாலினுடன், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரும் விழுப்புரம் சென்று ஆறுதல் கூறவிருக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து, கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற நபர்களை பற்றியும், அவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை பற்றியும் தெரிந்துகொள்ள நேரடியாக செல்ல முடிவு செய்துள்ளனர்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று காலை பங்கேற்ற பின்பு, விழுப்புரம் நோக்கி புறப்பட்டுள்ளார்.
மேலும், கள்ளச்சாராயம் விற்றதால் கைது செய்யப்பட்ட நபர்களின் விவரங்கள் பற்றியும், இதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்றும், இதனால் பணிநீக்கம் செய்யப்பட்ட போலீஸார்கள் போன்ற தகவல்களை சேகரிக்க அதிகாரிகள் தொடர்ந்து கவனிக்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil