Mk Stalin | மிக்ஜாம் புயலால் சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, டிச.5 ஆம் தேதி சென்னையில் உள்ள வெள்ள நிவாரண முகாம்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
செவ்வாய்கிழமை நகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்காக மீன்பிடி படகுகள் மற்றும் டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்கிடையில், மழையால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.
இன்று காலை முதல் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை ஓய்ந்து காணப்படுகிறது. இதனால், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு நேரம் கிடைத்தது.
காலை 9 மணி முதல் சென்னை விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. விமான நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை விமான நிலையப் பகுதியில் தண்ணீர் குறைந்துள்ளது, ஓடுபாதைகளிலோ, டாக்ஸிவேகளிலோ தண்ணீர் தேங்கவில்லை என்றும், ஏராளமான சேறும், சகதியுமான கழிவுகள் அகற்றப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் பயணிகளை விடுவிக்க புறப்படுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை விமான நிலையத்தின் டெர்மினல்களுக்குள் 21 விமானங்களும், சுமார் 1,500 பயணிகளும் விமான நிலையத்தில் உள்ளனர். இவர்களுக்கு விற்பனை நிலையங்களில் போதுமான அளவு உணவு கிடைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மு.க. ஸ்டாலின் ஆய்வு
சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்டு மொத்தம் 61,666 நிவாரண முகாம்களில் 11 லட்சம் உணவுப் பொட்டலங்களும், ஒரு லட்சம் பால் பாக்கெட்டுகளும் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி வெள்ள நிவாரணப் பணிகளுக்காக பிற மாவட்டங்களில் இருந்து 5000 தொழிலாளர்களை நகருக்கு வரவழைத்துள்ளது.
இந்த தொழிலாளர்கள் டிராக்டர்கள் மற்றும் மீன்பிடி படகுகளை பெரியமேடு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலும், வடசென்னை பகுதிகளிலும் மக்களை மீட்கவும், நிவாரணப் பொருட்களை விநியோகிக்கவும் பயன்படுத்தினர்.
Residents stuck in 5th St, Rangarajapuram , Srinagar colony , Saidapet is heavily waterlogged with no range, electricity, food or water can you please check if they can be helped. @chennaicorp @chennaiweather @mkstalin #ChennaiFloods #ChennaiRains pic.twitter.com/HfcskGUAXS
— Shri (@shriillsss) December 5, 2023
சென்னையில் கட்டம் கட்டமாக மின்விநியோகம் நடைபெற்று வரும் நிலையில், புறநகர் தாம்பரம், அசோக் நகர், காட்டுப்பாக்கம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பல மணி நேரமாக மின் சீரமைப்புக்கான அறிகுறியே இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
நகரின் புறநகரில் உள்ள முத்தியால்பேட்டை பகுதியில், 54 குடும்பங்கள் மீட்கப்பட்டு, பிரசவித்த ஒரு பெண் நகரின் சாலிகிராமத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டார்.
தாழ்வான பகுதிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் கோட்டூர்புரத்தில் உள்ள பள்ளி முகாமில் தஞ்சம் அடைந்தனர். மேலும், உள்ளூர் பேருந்து மழைநீரில் சிக்கி தவித்த 22 பயணிகள் பல்லாவரம் நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமுக்கு மாற்றப்பட்டனர்.
மகிந்திரா தார் கார்
தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மகிந்திரா நிறுவனத்தின் தார் (பழைய மாடல்) காரில் நிவாரண முகாம்களை பார்வையிட்டார்.
இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகிவருகின்றன. இந்தக் கார்கள் கரடு முரடான சாலைகள், தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளிலும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.