படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று அவருடைய உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5-ம் தேதி மாலை அவருடைய பெரம்பூர் வீட்டுக்கு வெளியே 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க, பா.ம.க, வி.சி.க, நா.த.க உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உதநிதி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவரும் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி நேரில் வந்து ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரை அவரது வீட்டுக்கு வெளியே வெட்டி படுகொலை செய்யும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு நிலைமை இருக்கிறது என்று விமர்சனம் செய்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் உடல் நீதிமன்ற உத்தரவுப்படி திருவள்ளூர் மாவட்டம், பொத்தூரில் உள்ள ரோஜா நகரில் ஜூலை 7-ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று அவருடைய உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காலை சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு சென்று அவருடைய உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆம்ஸ்ட்ராங் மனைவியிடம் ஆறுதல் தெரிவித்ததோடு “குற்றம் செய்தோர் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவார்கள்” எனவும் உறுதி அளித்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களது மறைவையொட்டி, பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று அவரது திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி, துயரில் வாடும் அவரது மனைவி திருமதி. பொற்கொடி அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும்… pic.twitter.com/B7zavTozRn
— M.K.Stalin (@mkstalin) July 9, 2024
இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களது மறைவையொட்டி, பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று அவரது திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி, துயரில் வாடும் அவரது மனைவி திருமதி. பொற்கொடி அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.
கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சகோதரி பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது.
இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும்! காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும்!” என்று உறுதி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.