மறைந்த எம்.பி கணேசமூர்த்தியின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
கடந்த 24ம் தேதி ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயற்சி செய்ததை அடுத்து தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது பிறந்த ஊரில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஈரோடு சென்றுள்ள, முதல்வர் ஸ்டாலின் எம்.பி கணேசமூர்த்தியின் இல்லத்திற்கு சென்று, அவரது குடும்பத்தினரை சந்தித்து நேரில் ஆறுதல் கூறினார். மேலும் அவரது வீட்டில் உள்ள எம்.பி கணேசமூர்த்தியின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"