கவிஞர் வைரமுத்துவின் பிறந்த நாளில், முதல்வர் மு.க. ஸ்டாலின் அவரது வீட்டுக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது குறித்து, வைரமுத்து மீது மி டூ (Me Too) குற்றச்சாட்டு வைத்த பாடகி சின்மயி கேள்வி எழுப்பியுள்ளதால் சர்ச்சையாகி உள்ளது.
கவிஞர், பாடலாசிரியர் வைரமுத்து அழியாப் புகழ்பெற்ற பல திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார். சிறந்த பாடலாசிரியருக்காக 7 முறை தேசிய விருதைப் பெற்றுள்ளார். கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளார். மேலும், இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்ம பூசன் விருதுகளைப் பெற்றுள்ளார்.
கவிஞர் வைரமுத்து ஆரம்ப காலத்தில் இருந்தே அவர் தி.மு.க ஆதரவாளராக இருந்து வந்துள்ளார். தி.மு.க தலைவர் மறைந்த கலைஞர் மு. கருணாநிதிக்கு நெருக்கமானவராக இருந்தார். அண்மையில், கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் கலைஞர் நூற்றாண்டுக் கவியரங்குக்கு தலைமை வகித்தார்.
கவிஞர் வைரமுத்து பற்றி திரைப்பட பின்னணி பாடகி சின்மயி 2018-ம் ஆண்டு மி டூ மூலம் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதுமட்டுமல்ல, மேலும் 12-க்கும் மேற்பட்ட பெண்கள் வைரமுத்து மீது மி டூ பாலியல் குற்றச்சாட்டு புகார்களை தெரிவித்தனர். சின்மயி வைரமுத்து மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வைரமுத்து இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இந்த புகார் குறித்து காவல்துறையும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு தமிழ் இலக்கிய வாசகர்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க. ஸ்டாலின், கவிஞர் வைரமுத்துவின் பிறந்த நாளில் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று, பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்க்கவிக்கு இது எழுபதாவது பிறந்தநாள். இன்னும் பல படைப்புகளைத் தருக கவிஞரே!
உமது திரைமொழியும் கவிமொழியும் தமிழ்மொழியை இன்னும் பல்லாண்டு வளர்க்கட்டும்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மி டூ மூலம் பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட கவிஞர் வைரமுத்து வீட்டுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது குறித்த பாடகி சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து பாடகி சின்மயி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “பல பெண்களால் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ள ஒரு மனிதனின் பிறந்தநாளில் அவருடைய வீட்டுக்கு நேரில் சென்று தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்; மி டூ இயக்கத்தில் இந்தக் கவிஞரை துஷ்பிரயோகம் செய்பவர் என்று வெளிப்படுத்தியதற்காக பல விருதுகளைப் பெற்ற பாடகி, பின்னணி குரல் கலைஞரான நான், 2018 முதல் தமிழ்த் திரைப்படத் துறையால் வேலை செய்ய தடையை எதிர்கொண்டு வருகிறேன்.
மிகவும் மோசமான 5 ஆண்டுகளை எண்ணிக்கொண்டிருக்கிறேன். ஏனெனில் சட்டப்பூர்வ நடைமுறையே உங்கள் பெரிய தண்டனை; ‘நியாயம் கேட்க எவ்வளவு துணிச்சல் இருக்கும்?” என்று அவர்கள் கேட்பது போல இருக்கிறது.
பல தசாப்தங்களுக்கு முன்னர் பாலியல் துஷ்பிரயோகம் செய்பவரும் கவிஞர், எந்தப் பெண்ணின் மீதும் கை வைக்கலாம் என்று முடிவு செய்தார். பல அரசியல்வாதிகளுடன் குறிப்பாக தி.மு.க-வுடன் தனது நெருக்கத்தால் அந்த பெண்ணை அமைதியாக இருக்குமாறு அச்சுறுத்தினார். அவர் பல பத்ம விருதுகள் மற்றும் சாகித்ய அகாடமி விருது மற்றும் பல தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
இந்த மனிதனுக்கு இருக்கும் சக்தி இதுதான், நானும் பல பெண்களும் இதைப் பற்றி இதற்கு முன்பு ஏன் பேசவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள்.
பெண்களின் பாதுகாப்பிற்காக தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பேசும் அனைத்து பேச்சுகளுக்கும், இது ஒரு அழுகை தரும் அவமானம். விவகாரத்தைக் கொண்டு வரும்போது நிச்சயமாக அவர்கள் அனைவரும் அமைதியாகிவிடுகிறார்கள்.
நுண்ணுணர்வு, பச்சாதாபம், கல்வி மற்றும் விழிப்புணர்வு ஆகியவை பூஜ்ஜியமாக இருக்கிறது.
பிரிஜ் பூஷன் முதல் வைரமுத்து வரை அவர்கள் அனைவரும் எப்போதும் தப்பித்து விடுவார்கள். ஏனென்றால், அரசியல்வாதிகள் இந்த மனிதர்களைப் பாதுகாப்பார்கள்.
இந்த நாட்டில் அடிப்படையிலேயே இல்லாத நீதி என்ற மாயக் குதிரை விஷயத்தை விரும்பி ஏன் கவலைப்பட வேண்டும்.” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த மனிதனுக்கு இருக்கும் சக்தி இதுதான், நானும் பல பெண்களும் இதற்கு முன்பு ஏன் பேசவில்லை என்று மக்கள் கேட்டார்கள்.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பேசும் அனைத்து பேச்சுகளுக்கும், பெண்களின் பாதுகாப்பிற்காக இது அழும் அவமானம். வைரமுத்துவின் தலைப்பைக் கொண்டு வரும்போது நிச்சயமாக அவர்கள் அனைவரும் அமைதியாகிவிடுவார்கள்.
இந்த மண்ணில் இந்த அற்புதமான கலாச்சாரம் உள்ளது, ஒவ்வொரு ஆண்டும் துஷ்பிரயோகம் செய்பவரின் பிறந்தநாளில், சிறந்த தமிழ்ப் பெண்ணியப் பண்பாட்டில் உள்ள / ஆண்களும் பெண்களும் துன்புறுத்தப்பட்ட பெண்ணைக் குறியிட்டு வயிறு எரியுதா என்று சொல்வது அவசியமா? இது, நமது அற்புதமான பலாத்கார மன்னிப்புக் கலாச்சாரம். எங்கே அவர்கள் பாலியல் குற்றவாளிகளைக் கொண்டாடுகிறார்கள், பேசும் பெண்களைத் துன்புறுத்துகிறார்கள்.
உணர்திறன், பச்சாதாபம், கல்வி மற்றும் விழிப்புணர்வு ஆகியவை பூஜ்ஜியமாகும்.
பிரிஜ் பூஷன் முதல் வைரமுத்து வரை அவர்கள் அனைவரும் எப்போதும் தப்பித்து விடுவார்கள், ஏனென்றால் அரசியல்வாதிகள் இந்த மனிதர்களைப் பாதுகாப்பார்கள்.
இந்த நிலத்தில் அடிப்படையில் இல்லாத நீதி என்ற மந்திர யுனிகார்ன் விஷயத்தை விரும்புவது கூட ஏன் கவலைப்பட வேண்டும்.
கவிஞர் வைரமுத்துவின் பிறந்த நாளில், அவரது இல்லத்துக்கு நேரில் சென்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தது குறித்து, வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பாடகி சின்மயி கேள்வி எழுப்பியுள்ளதால் சர்ச்சையாக வெடித்துள்ளது. சமூக ஊடகங்களில் பலரும் பாடகி சின்மயிக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில், கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.